கிரிக்கெட் (Cricket)

சி.எஸ்.கே.வுக்கு வாங்க: சாய் சுதர்சனுக்கு கோரிக்கை விடுத்த ரசிகர்

Published On 2025-10-14 19:58 IST   |   Update On 2025-10-14 19:58:00 IST
  • சாய் சுதர்சன் எல்லைக் கோட்டின் அருகே தரையில் அமர்ந்து சாண்ட்விச் சாப்பிட்டுக் கொண்டிருந்தார்.
  • கடந்த ஐபிஎல் தொடரில் குஜராத் அணிக்காக 15 இன்னிங்சில் 759 ரன்களைக் குவித்தார்.

புதுடெல்லி:

இந்தியா, வெஸ்ட் இண்டீஸ் அணிகளுக்கு இடையிலான 2வது டெஸ்ட் போட்டி டெல்லியில் நடைபெற்றது. இதில் இந்திய அணி 7 விக்கெட் வித்தியாசத்தில் வென்றதுடன் டெஸ்ட் தொடரை 2-0 என கைப்பற்றியது.

இதற்கிடையே, டெல்லி டெஸ்ட்டின் 4-ம் நாள் ஆட்டத்தின்போது சாய் சுதர்சன் தனது பயிற்சி உடையில் எல்லைக் கோட்டிற்கு அருகே தரையில் அமர்ந்து மைதானத்தில் பந்து பொறுக்கும் சிறுவர்களுடன் சேர்ந்து சாண்ட்விச் சாப்பிட்டுக் கொண்டிருந்தார்.

இந்நிலையில், சாய் சுதர்சன் பவுண்டரி லைனில் அமர்ந்திருந்தபோது ரசிகர் ஒருவர், குஜராத் டைட்டன்சை விட்டுவிட்டு சி.எஸ்.கே. அணிக்கு வாங்க என உணர்ச்சிப்பூர்வமாகக் கோரிக்கை விடுத்தார்.

இந்த வீடியோ வெளியானதை தொடர்ந்து, சமூக வலைதளத்தில் சிஎஸ்கே ரசிகர்கள் அவருக்கு இதே கோரிக்கையை விடுதது வருகின்றனர்.

கடந்த ஐபிஎல் தொடரில் குஜராத் டைட்டன்ஸ் அணிக்காக 15 இன்னிங்ஸ்களில் 759 ரன்களைக் குவித்து 'மிஸ்டர் கன்சிஸ்டன்ட்' என பெயர் பெற்றவர் சாய் சுதர்சன் என்பது குறிப்பிடத்தக்கது.

தமிழகத்தைச் சேர்ந்த சிறந்த வீரர் உள்ளூர் அணியான சிஎஸ்கேவில் விளையாட வேண்டும் என்பதே சி.எஸ்.கே. ரசிகர்களின் எதிர்பார்ப்பாக உள்ளது.

Tags:    

Similar News