கிரிக்கெட் (Cricket)

சாம்பியன்ஸ் கோப்பை: ஸ்டீவ் ஸ்மித் தலைமையிலான ஆஸ்திரேலிய அணி அறிவிப்பு

Published On 2025-02-12 12:13 IST   |   Update On 2025-02-12 12:13:00 IST
  • சாம்பியன்ஸ் கோப்பைக்கான ஆஸ்திரேலிய அணியில் இருந்து ஸ்டார்க் விலகல்
  • காயத்தால் அவதிப்பட்டு வரும் பேட் கம்மின்ஸ் சாம்பியன் கோப்பை அணியில் இருந்து விலகியுள்ளார்.

சர்வதேச கிரிக்கெட் கவுன்சில் (ஐ.சி.சி.) நடத்தும் சாம்பியன்ஸ் கோப்பை 2025 கிரிக்கெட் தொடரின் முதல் போட்டி பிப்ரவரி 19-ம் தேதி தொடங்குகிறது. இந்த தொடரில் மொத்தம் எட்டு அணிகள் மோதுகின்றன. பாகிஸ்தான் மற்றும் துபாயில் நடைபெறும் இந்த தொடருக்காக ஒவ்வொரு அணியும் தீவிர பயிற்சியில் ஈடுபட்டு வருகின்றன.

சாம்பியன்ஸ் கோப்பை 2025 தொடருக்கான ஆஸ்திரேலிய அணியில் காயத்தால் அவதிப்பட்டு வரும் கேப்டன் பேட் கம்மின்ஸ் மற்றும் வேகப்பந்து வீச்சாளர் ஜோஷ் ஹேசில்வுட் ஆகியோர் அணியில் இருந்து விலகியுள்ளனர் . மேலும், சொந்த காரணங்களுக்காக சாம்பியன்ஸ் கோப்பை அணியில் இருந்து விலகுவதாக மிட்செல் ஸ்டார்க் விலகியுள்ளார்.

இந்நிலையில், சாம்பியன் கோப்பைக்கு ஸ்டீவ் ஸ்மித் தலைமையிலான 15 பேர் கொண்ட ஆஸ்திரேலிய அணி அறிவிக்கப்பட்டுள்ளது.

ஆஸ்திரேலிய அணி வீரர்கள் விவரம்:

ஸ்டீவ் ஸ்மித் (கேப்டன்), சீன் அபோட், அலெக்ஸ் கேரி, பென் ட்வார்ஷூயிஸ், நாதன் எல்லிஸ், ஜேக் ஃப்ரேசர்-மெக்குர்க், ஆரோன் ஹார்டி, டிராவிஸ் ஹெட், ஜோஷ் இங்கிலிஸ், ஸ்பென்சர் ஜான்சன், மார்னஸ் லபுஷேன், க்ளென் மேக்ஸ்வெல், தன்வீர் சங்கா, மாட்த்யூ ஷார்ட், ஆடம் ஜாம்பா

Tags:    

Similar News