கிரிக்கெட் (Cricket)

முதல் போட்டியின் போதே ஓய்வு முடிவில் அஸ்வின் உறுதியாக இருந்தார்- ரோகித் சர்மா

Published On 2024-12-18 13:51 IST   |   Update On 2024-12-18 13:51:00 IST
  • இந்திய அணி என்ன சிந்திக்கிறது எந்த கலவையை விரும்புகிறது என்பதை அஸ்வின் புரிந்துள்ளார்.
  • அஸ்வின் எடுக்கும் முடிவுக்கு மரியாதை கொடுத்து நாங்கள் அவருக்கு உறுதுணையாக இருப்பது அவசியம்.

அஸ்வின் ஓய்வு குறித்து இந்திய அணியின் கேப்டன் ரோகித் சர்மா வெளிப்படையாக சில கருத்துக்களை தெரிவித்துள்ளார். முதல் போட்டியின் முடிவிலேயே ஓய்வை அறிவிக்க போவதாக அஸ்வின் கூறினார். நான் தான் 2-வது டெஸ்ட் போட்டியில் விளையாடுங்கள் என கூறி அவரை சம்மதிக்க வைத்தேன் என ரோகித் சர்மா கூறினார்.

இது பற்றி ரோகித் சர்மா கூறியதாவது:-

முதல் போட்டியின் போதே இந்த முடிவில் அவர் உறுதியாக இருந்தார். அப்போட்டியின் முதல் 3 -4 நாட்கள் நான் இந்திய கிரிக்கெட் அணியில் இல்லை. அப்போது இது தான் அவரது மனதில் இருந்தது. அதற்குப் பின்னணியில் நிறைய விஷயங்கள் இருந்தன.

இது பற்றிய தெளிவான விளக்கங்களை அஸ்வின் தன்னுடைய இடத்தில் கொடுப்பார் என்று நினைக்கிறேன். இந்திய அணி என்ன சிந்திக்கிறது எந்த கலவையை விரும்புகிறது என்பதை அஸ்வின் புரிந்துள்ளார். ஆஸ்திரேலியாவில் எந்த ஸ்பின்னர் விளையாடுவார் என்பது சூழ்நிலை காரணமாக எங்களுக்கு உறுதியாக தெரியவில்லை.

அதனால் மைதானத்தை பார்த்த பின்பே முடிவை எடுக்க வேண்டியுள்ளது. ஆனால் பெர்த் நகருக்கு வந்ததும் இதைத்தான் நாங்கள் பேசினோம். எப்படியோ நான் அவரை சம்மதிக்க வைத்து இரண்டாவது போட்டியில் விளையாட வைத்தேன். அனேகமாக இந்தத் தொடருக்கு தேவைப்படாத நான் வெளியே செல்வதே சிறந்த வழி என்று அஸ்வின் உணர்ந்திருக்கலாம்.

அதனால் கிரிக்கெட்டுக்கு அவர் குட் பை சொல்லியிருக்கலாம். அடுத்தப் போட்டியில் எந்த ஸ்பின்னர் தேவை என்பதும் எங்களுக்குத் தெரியவில்லை. இருப்பினும் அஸ்வின் எடுக்கும் முடிவுக்கு மரியாதை கொடுத்து நாங்கள் அவருக்கு உறுதுணையாக இருப்பது அவசியம் என்று கூறினார். 

Tags:    

Similar News