கிரிக்கெட் (Cricket)
ஜூனியர் ஆசிய கோப்பை: இலங்கையை வீழ்த்தி இறுதிப்போட்டிக்கு முன்னேறியது இந்தியா
- முதலில் பேட் செய்த இலங்கை அணி 20 ஓவரில் 138 ரன்களை எடுத்தது.
- அடுத்து ஆடிய இந்திய அணி 139 ரன்கள் எடுத்து வெற்றி பெற்றது.
துபாய்:
12-வது ஜூனியர் ஆசிய கோப்பை கிரிக்கெட் போட்டி துபாயில் நடந்து வருகிறது. இதில் பங்கேற்றுள்ள 8 அணிகள் இரு பிரிவாகப் பிரிக்கப்பட்டு மோதுகின்றன.
லீக் சுற்று முடிவில் இந்தியா, இலங்கை, வங்கதேசம், பாகிஸ்தான் ஆகிய அணிகள் அரையிறுதிக்கு முன்னேறின.
இந்நிலையில், முதல் அரையிறுதியில் இந்தியா, இலங்கை அணிகள் மோதின. டாஸ் வென்ற இந்தியா பவுலிங் தேர்வு செய்தது.
அதன்படி, முதலில் பேட் செய்த இலங்கை அணி 20 ஓவரில் 8 விக்கெட்டுக்கு 138 ரன்கள் எடுத்தது. அதிகபட்சமாக சமிகா 42 ரன்கள் எடுத்தார்.
தொடர்ந்து ஆடிய இந்திய அணி 18 ஓவரில் 2 விக்கெட்டுக்கு 139 ரன்கள் எடுத்து வெற்றி பெற்றது.
மற்றொரு அரையிறுதியில் வங்கதேசத்தை பாகிஸ்தான் வீழ்த்தி இறுதிப்போட்டிக்கு முன்னேறியது.
நாளை மறுதினம் நடைபெறும் இறுதிப் போட்டியில் இந்தியா-பாகிஸ்தான் அணிகள் மோதுகின்றன.