கிரிக்கெட் (Cricket)

ஆர்சிபி வெற்றி கொண்டாட்டத்தில் 11 பேர் பலி- புதிதாக கைது நடவடிக்கைக்கு உயர்நீதிமன்றம் தடை

Published On 2025-06-09 18:01 IST   |   Update On 2025-06-09 18:01:00 IST
  • ஆர்சிபி வெற்றி கொண்டாட்டத்தில் 11 பேர் பலியாகினர்.
  • இந்த சம்பவம் தொடர்பாக 4 பேரை போலீசார் கைது செய்தனர்.

நடப்பு ஐபிஎல் தொடரில் ஆர்சிபி அணி கோப்பையை கைப்பற்றியது. ஐபிஎல் வரலாற்றில் ஆர்சிபி அணி முதல் முறையாக கோப்பை வென்றது. இதனை ரசிகர்கள் மட்டுமின்றி வீரர்கள் கொண்டாடினர்.

ஆர்சிபி வீரர்களுக்கு பாராட்டு விழா நடத்துவதற்காக பெங்களூரு சின்னசாமி கிரிக்கெட் மைதானத்தில் விழா ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. இதனை கண்டுகளிப்பதற்காக அங்கு மக்கள் ஏராளமானோர் கூடினர்.

இந்த கூட்ட நெரிசலில் சிக்கி 11 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர். இந்த சம்பவம் குறித்து ஆர்சிபி நிர்வாகி உள்ளிட்ட 4 பேரை போலீசார் கைது செய்தனர்.

இந்நிலையில் 11 பேர் பலியான சம்பவத்தில் புதிதாக கைது நடவடிக்கை மேற்கொள்ள உயர்நீதிமன்றம் இடைக்கால தடை விதித்துள்ளது. இந்த சம்பவத்தில் தாங்கள் கைது செய்யப்பட்டது சட்டவிரோதம் என ஆர்சிபி தரப்பில் நீதிமன்றத்தில் தெரிவிக்கப்பட்டது.

ஜூன் 11-ம் தேதி வழக்கு விசாரணைக்கு வரும்வரை ஆர்சிபி அணி நிர்வாகிகள் உள்ளிட்டவர்களை கைது செய்ய இடைக்கால தடை விதிக்கப்பட்டுள்ளது.

Tags:    

Similar News