செய்திகள்
கேஎல் ராகுல்

கேஎல் ராகுல் 132 ரன்கள் விளாச ஆர்சிபி-க்கு 207 ரன்கள் வெற்றி இலக்காக நிர்ணயித்தது பஞ்சாப்

Published On 2020-09-24 15:56 GMT   |   Update On 2020-09-24 15:56 GMT
கேஎல் ராகுல் அட்டகாசமாக விளையாடி 132 ரன்கள் விளாச ஆர்சிபி-க்கு 207 ரன்கள் வெற்றி இலக்காக நிர்ணயித்துள்ளது கிங்ஸ் லெவன் பஞ்சாப்.
ஆர்சிபி- கிங்ஸ் லெவன் பஞ்சாப் அணிகளுக்கு இடையிலான ஆட்டம் துபாயில் நடைபெற்று வருகிறது. ஆர்சிபி டாஸ் வென்று பந்து வீச்சை தேர்வு செய்தது. கிங்ஸ் லெவன் பஞ்சாப் அணியின் கேஎல் ராகுல், மயங்க் அகர்வால் தொடக்க வீரர்களாக களம் இறங்கினர். இருவரும் தொடக்கத்தில் சிறப்பான தொடக்கம் கொடுத்தனர். அதன்பின் மயங்க் அகர்வால் சற்று தடுமாறினார்.

பவர் பிளே-யில் பஞ்சாப் அணி விக்கெட் இழப்பின்றி 50 ரன்கள் சேர்த்தது. 6-வது ஓவரை சாஹல் வீசினார். இந்த ஓவரின் கடைசி பந்தில் மயங்க் அகர்வால் 20 பந்தில் 26 ரன்கள் எடுத்த நிலையில் ஸ்டம்பை பறிகொடுத்தார்.

அடுத்து நிக்கோலஸ் பூரன் ஜோடி சேர்ந்தார். இந்த ஜோடியும் அதிரடி ஆட்டத்தை உடனடியாக தொடங்கவில்லை. 10-வது ஓவரில் உமேஷ் யாதவ் 2 பவுண்டரி, ஒரு சிக்சருன் 20 ரன்கள் விட்டுக்கொடுக்க பஞ்சாப் அணி 10 ஓவரில் 1 விக்கெட் இழப்பிற்கு 90 ரன்கள் எடுத்தது.

பூரன் 17 ரன்னில் ஆட்டமிழந்தார், அடுத்து வந்த கிளென் மேக்ஸ்வெல் 5 ரன்னில் வெளியேறினார். ஆனால் மறுமுனையில் சிறப்பாக விளையாடி கேஎல் ராகுல் அரைசதம் அடித்தார். அதன்பின் அதிரடி ஆட்டத்தை வெளிப்படுத்தினார்.

17-வது ஓவரின் கடைசி பந்திலும், 18-வது ஓவரின் கடைசி பந்திலும் விராட் கோலியிடம் கொடுத்த கேட்ச்-ஐ தவறவிட்டார். ஸ்டெயின் வீசிய 19-வது ஓவரின் முதல் பந்தை சிக்சருக்கு தூக்கினார். அடுத்த பந்தை பவுண்டரிக்கு விரட்டி சதம் அடித்தார். மேலும் 4வது, ஐந்தாவது பந்துகளை சிக்சருக்கு தூக்கி கடைசி பந்தில் பவுண்டரி அடித்தார். ஸ்டெயின் இந்த ஓவரில் 26 ரன்கள் விட்டுக்கொடுத்தார்.

கடைசி ஓவரை ஷிவம் டுபே வீசினார். இந்த ஓவரில் பஞ்சாப் அணி 23 ரன்கள் விரட்ட 20 ஓவரில 3 விக்கெட் இழப்பிற்கு 206 ரன்கள் குவித்தது. கேஎல் ராகுல் 69 பந்தில் 14 பவுண்டரி, 7 சிக்சருடன் 132 ரன்கள் எடுத்து ஆட்டமிழக்காமல் இருந்தார்.
Tags:    

Similar News