கனடாவை தொடர்ந்து இங்கிலாந்து: அதிபர் ஜி ஜின்பிங் உடன் கெய்ர் ஸ்டார்மர் சந்திப்பு
- இங்கிலாந்து பிரதமர் கெய்ர் ஸ்டார்மர் 4 நாள் அரசுமுறை பயணமாக சீனா சென்றுள்ளார்.
- 8 ஆண்டுகளுக்கு பிறகு இங்கிலாந்து பிரதமர் ஒருவர் சீனா செல்வது இது முதல் முறை
பீஜிங்:
இங்கிலாந்து பிரதமர் கெய்ர் ஸ்டார்மர் 4 நாள் அரசுமுறை பயணமாக சீனா சென்றுள்ளார். தலைநகர் பிஜீங் சென்ற அவருக்கு சிறப்பான வரவேற்பு அளிக்கப்பட்டது. 8 ஆண்டுகளுக்கு பிறகு இங்கிலாந்து பிரதமர் ஒருவர் சீனாவுக்கு செல்வது இது முதல் முறை ஆகும். ஸ்டார்மர் தன்னுடன் 54 தொழில் அதிபர்களை அழைத்துச் சென்றுள்ளார்.
இந்நிலையில், இங்கிலாந்து பிரதமர் கெய்ர் ஸ்டார்மர் நேற்று காலை சீன அதிபர் ஜி ஜின்பிங்கைச் சந்தித்து இருதரப்பு பேச்சுவார்த்தை நடத்தினார். இந்தச் சந்திப்பு 1 மணி நேரம் 20 நிமிடங்கள் நடந்தது.
இதில் வர்த்தகம், பாதுகாப்பு, பொருளாதாரம் உள்ளிட்ட பல்வேறு துறைகள் தொடர்பாக இரு தலைவர்களும் ஆலோசனை நடத்தினர்.
சமீபகாலமாக அமெரிக்க அதிபர் டிரம்ப் பல்வேறு நாடுகள் மீது வரிகளை கடுமையாக விதித்து வருகிறார். சீனா, இங்கிலாந்து மீதும் வரிகளை விதித்தார். இதனால் இங்கிலாந்து பிரதமரின் இந்த சீன பயணம் முக்கியத்துவம் வாய்ந்ததாகக் கருதப்படுகிறது.
கடந்த சில நாட்களுக்கு முன்பு கனடா பிரதமர் மார்க் கார்னி சீனாவுக்கு பயணம் மேற்கொண்டார் என்பது குறிப்பிடத்தக்கது.