செய்திகள்

வெஸ்ட் இண்டீசுக்கு எதிரான 3வது டெஸ்ட் - முதல் நாள் முடிவில் இங்கிலாந்து 231/4

Published On 2019-02-10 03:22 GMT   |   Update On 2019-02-10 03:22 GMT
வெஸ்ட் இண்டீசுக்கு எதிரான மூன்றாவது டெஸ்ட் போட்டியின் முதல் நாள் ஆட்ட நேர முடிவில் இங்கிலாந்து அணி 4 விக்கெட் இழப்புக்கு 231 ரன்கள் எடுத்துள்ளது. #WIvENG
இங்கிலாந்து அணி வெஸ்ட் இண்டீசில் சுற்றுப்பயணம் செய்து விளையாடி வருகிறது. 3 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் 2-0 என வெஸ்ட் இண்டீஸ் தொடரை கைப்பற்றியுள்ளது.

இந்நிலையில், இரு அணிகளுக்கு இடையிலான 3வது டெஸ்ட் போட்டி செயிண்ட் லுசியா நகரில் நேற்று தொடங்கியது.

டாஸ் வென்ற வெஸ்ட் இண்டீஸ் அணி முதலில் பந்துவீச்சை தேர்வு செய்தது. அதன்படி, இங்கிலாந்து அணி முதலில் களமிறங்கியது.

இங்கிலாந்து அணியின் தொடக்க ஆட்டக்காரர்களாக ரோரி பர்ன்ஸ், ஜென்னிங்ஸ் ஆகியோர் இறங்கினர். ஜென்னிங்ஸ் 8 ரன்னிலும், ரோரி பர்ன்ஸ் 29 ரன்னிலும் ஆட்டமிழந்தனர். அடுத்து இறங்கிய டென்லி 20 ரன்னிலும், கேப்டன் ஜோ ரூட் 15 ரன்னிலும் அவுட்டாகினர். இங்கிலாந்து அணி 4 விக்கெட்டுக்கு 107 ரன்கள் எடுத்து தத்தளித்து. 



தொடர்ந்து இறங்கிய ஜோஸ் பட்லர் மற்றும் பென் ஸ்டோக்ஸ் நிதானமாக ஆடி மேற்கொண்டு விக்கெட்டுகள் விழாமல் பார்த்துக் கொண்டனர். இருவரும் அரை சதமடித்தனர்.

முதல் நாள் ஆட்ட முடிவில், இங்கிலாந்து அணி 4 விக்கெட் இழப்புக்கு 231 ரன்கள் எடுத்துள்ளது. ஜோஸ் பட்லர் 67 ரன்னும், பென் ஸ்டோக்ஸ் 62 ரன்னும் எடுத்து ஆட்டமிழக்காமல் உள்ளனர்.

வெஸ்ட் இண்டீஸ் அணி சார்பில் கீமோ பால் 2 விக்கெட்டும், கேப்ரியல், ஜோசப் ஆகியோர் தலா ஒரு விக்கெட் வீழ்த்தினர். #WIvENG
Tags:    

Similar News