கிரிக்கெட் (Cricket)

இந்திய டெஸ்ட் அணியின் பயிற்சியாளராக விருப்பமா? ஒரே வார்த்தையில் கில்லஸ்பி பதில்

Published On 2026-01-02 11:17 IST   |   Update On 2026-01-02 11:17:00 IST
  • இந்திய அணி அவர்களது சொந்த மண்ணில் டெஸ்ட் கிரிக்கெட்டில் தோல்வியை தழுவி வருகிறது.
  • இரண்டு டெஸ்ட் தொடர்களை முழுமையாக இழந்துள்ளனர்.

சிட்னி:

ஆஸ்திரேலிய கிரிக்கெட் அணியின் முன்னாள் வேகப்பந்து வீச்சாளர் ஜேசன் கில்லஸ்பி, பாகிஸ்தான் டெஸ்ட் கிரிக்கெட் அணியின் தலைமை பயிற்சியாளராக 2024-ம் ஆண்டு ஏப்ரல் மாதம் நியமிக்கப்பட்டார். ஆனால் அடுத்த 8 மாதங்களிலேயே பயிற்சியாளர் பதவியை துறந்தார்.

இந்த நிலையில் தனது எக்ஸ் தளத்தின் மூலம் தன்னை பின்தொடர்பவர்களுடன் கலந்துரையாடிய அவரிடம் இது பற்றி கேட்கப்பட்டது. அதற்கு கில்லஸ்பி, 'பாகிஸ்தான் டெஸ்ட் அணியின் தலைமை பயிற்சியாளராக நான் இருந்தேன். பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியம் என்னிடம் எதுவும் ஆலோசிக்காமல் சீனியர் உதவி பயிற்சியாளரை நீக்கியது. ஒரு தலைமை பயிற்சியாளராக இதை என்னால் எந்த வகையிலும் ஏற்றுக்கொள்ள முடியவில்லை. இது போன்ற பல அவமதிப்புகளை சந்தித்தேன். அதனால் தான் விலகினேன்' என்றார்.

'இந்திய அணி அவர்களது சொந்த மண்ணில் டெஸ்ட் கிரிக்கெட்டில் தோல்வியை தழுவி வருகிறது. இரண்டு டெஸ்ட் தொடர்களை முழுமையாக இழந்துள்ளனர். அதனால் இந்திய டெஸ்ட் அணிக்கான பயிற்சியாளராக நீங்கள் செயல்பட வேண்டும். உங்களது பயிற்சி இந்திய அணிக்கு தேவைப்படுகிறது' என ரசிகர் ஒருவர் கேட்டார். அதற்கு கில்லஸ்பி, வேண்டாம்.... நன்றி கூறி பின்வாங்கினார்.

Tags:    

Similar News