செய்திகள்

ஆசிய கோப்பையில் 317 ரன்கள் குவிப்பு- ஐசிசி தரவரிசையில் 2-வது இடத்திற்கு முன்னேறினார் ரோகித் சர்மா

Published On 2018-09-30 13:41 IST   |   Update On 2018-09-30 13:41:00 IST
ஆசிய கோப்பை கிரிக்கெட் தொடரில் 317 ரன்கள் குவித்ததன் மூலம் ரோகித் சர்மா ஐசிசி ஒருநாள் தரவரிசையில் 2-வது இடத்திற்கு முன்னேறியுள்ளார். #ICCRankings #RohitSharma
ஆசிய கோப்பை ஒருநாள் கிரிக்கெட் தொடர் துபாய் மற்றும் அபு தாபியில் நடைபெற்றது. இந்தியா இரண்டு லீக், மூன்று ‘சூப்பர் 4’ மற்றும் இறுதிப் போட்டி என 6 போட்டிகளில் விளையாடியது. இதில் இந்திய அணி கேப்டனாக செயல்பட்ட ரோகித் சர்மா 5 போட்டிகளில் விளையாடினார்.

ஐந்து இன்னிங்சில் ஒரு சதம் இரண்டு அரைசதத்துடன் 317 ரன்கள் குவித்தார். இதன்மூலம் ஐசிசி ஒருநாள் தரவரிசையில் 2-வது இடத்திற்கு முன்னேறியுள்ளார். விராட் கோலி முதல் இடத்தில் நீடிக்கிறார். 342 ரன்கள் குவித்து ஆட்ட நாயகன் விருது பெற்ற ஷிகர் தவான் நான்கு இடங்கள் முன்னேறி ஐந்தாவது இடத்தை பிடித்துள்ளார்.



பந்து வீச்சாளர்களில் பும்ரா முதல் இடத்தில் நீடிக்கிறார். குல்தீப் யாதவ் மூன்று இடங்கள் முன்னேறி 3-வது இடத்தை பிடித்துள்ளார். இதுதான் ஒருநாள் தரவரிசையில் இவரது சிறந்த தரவரிசையாகும்.

ஆப்கானிஸ்தான் சுழற்பந்து வீச்சாளர் ரஷித் கான் பந்து வீச்சாளர்களில் 2-வது இடத்தையும், ஆல்ரவுண்டர் தரவரிசையில் முதல் இடத்தையும் பிடித்துள்ளார்.
Tags:    

Similar News