புதுச்சேரி

புதுச்சேரியில் போன்று விஜய்க்கு தமிழ்நாட்டில் பாதுகாப்பு கொடுக்கப்படவில்லை - ஆதவ் அர்ஜுனா

Published On 2025-12-09 11:34 IST   |   Update On 2025-12-09 11:34:00 IST
  • புதுச்சேரி காவல்துறை இந்தியாவிற்கு முன்னுதாரணமாக இருந்து வருகிறது.
  • கூடிய விரைவில் மதுரை மாநாடு போன்று புதுச்சேரியிலும் மிகப்பெரிய அளவில் பிரசாரத்தை த.வெ.க. நடத்தும்.

புதுவை உப்பளம் மைதானத்தில் நடைபெறும் த.வெ.க. பொதுக்கூட்டத்தில் த.வெ.க. தேர்தல் பிரசார மேலாண்மைப் பொதுச்செயலாளர் ஆதவ் அர்ஜுனா உரையாற்றினார். அப்போது அவர் கூறியதாவது:

* தமிழக காவல்துறையை கைகளில் வைத்துள்ள முதல்வர் அவர்களே புதுச்சேரி காவல்துறையை பாருங்கள்.

* புதுச்சேரி காவல்துறை இந்தியாவிற்கு முன்னுதாரணமாக இருந்து வருகிறது.

* புதுச்சேரியில் கொடுத்துள்ளது போன்று த.வெ.க. தலைவர் விஜய்க்கு தமிழ்நாட்டில் பாதுகாப்பு கொடுக்கப்படவில்லை.

* காற்று, வெள்ளத்தை எப்படி நிறுத்த முடியாதோ அதைப்போலத்தான் த.வெ.க.வை நிறுத்த முடியாது.

* கூடிய விரைவில் மதுரை மாநாடு போன்று புதுச்சேரியிலும் மிகப்பெரிய அளவில் பிரசாரத்தை த.வெ.க. நடத்தும்.

* புதுச்சேரி வரலாற்றை புதிதாக எழுதப்போகிறோம்.

இவ்வாறு அவர் கூறினார்.

Tags:    

Similar News