புதுச்சேரி

அதிக லாபத்துக்கு ஆசைப்பட்டு ரூ.5½ கோடி இழந்த தொழில் அதிபர்

Published On 2026-01-27 10:38 IST   |   Update On 2026-01-27 10:38:00 IST

    புதுச்சேரி:

    புதுச்சேரி ரெயின்போ நகரை சேர்ந்த தொழில் அதிபர் ஒருவரின் செல்போன் எண்ணுக்கு வாட்ஸ்-அப் மூலம் மெசேஜ் வந்தது.

    அதில் ஆன்லைன் வர்த்தகம் மூலம் அதிகம் சம்பாதிக்கலாம் என்று குறிப்பிடப்பட்டு இருந்தது. இதற்கு அவர் சம்மதம் தெரிவித்தார். தொடர்ந்து மர்ம நபர்கள் அவரை தொடர்பு கொண்டு ஆன்லைன் வர்த்தகம் எவ்வாறு செய்ய வேண்டும் என்று ஆலோசனை வழங்கினர்.

    பின்னர் அவர்கள் ஒரு லிங்கை அவருக்கு அனுப்பி அதன் மூலம் முதலீடு செய்யுமாறு கூறினர். இதனை தொடர்ந்து அவர் முதலில் ரூ.5 ஆயிரம் முதலீடு செய்தார். இதன் மூலம் அவருக்கு ரூ.3 ஆயிரம் லாபம் கிடைத்தது.

    இதனை தொடர்ந்து அவர் பல்வேறு தவணைகளாக ரூ.5½ கோடி முதலீடு செய்தார். இதன் மூலம் கிடைத்த லாபத்தை தனது வங்கி கணக்கிற்கு மாற்ற முயற்சி செய்தார். ஆனால் அது முடியவில்லை.

    எனவே அவர் தனக்கு முதலில் ஆலோசனைகள் வழங்கியவரை தொடர்பு கொள்ள முயற்சி செய்தார். ஆனால் முடியவில்லை. இதனால் தான் மோசடி செய்யப்பட்டதை உணர்ந்த அவர் புதுச்சேரி சைபர் கிரைம் போலீசில் புகார் செய்தார்.

    புகாரின் பேரில் சைபர் கிரைம் போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    Tags:    

    Similar News