புதுச்சேரி

மஞ்சள் நீராட்டு விழாவில் மருமகளுக்கு 480 பாரம்பரிய நெல் ரகங்களை சீர் கொடுத்த தாய்மாமன்

Published On 2026-01-27 10:11 IST   |   Update On 2026-01-27 10:11:00 IST
  • நெல் ரகங்களின் சீர் தட்டுக்களை உறவினர்கள் ஆச்சரியத்துடன் பார்த்தனர்.
  • விவசாய விழாக்களில் நெல் வகைகளை வைத்தால் விவசாயிகள் மட்டும் பார்ப்பார்கள்.

புதுச்சேரி:

சுப விழாக்களில் பழம், இனிப்பு, அலங்கார பொருட்கள் போன்றவை சீர் வரிசையில் இருக்கும்.

ஆனால் பழங்காலத்தில் விவசாயத்தின் மூலம் கிடைக்கும் நெல், தானியம், காய்கறி போன்றவற்றை தாய்மாமன் சீர்வரிசையாக கொடுத்து வந்தனர். இதனை நினைவு கூறும் நிகழ்வு புதுச்சேரியில் நடந்த மஞ்சள் நீராட்டு விழாவில் நடைபெற்றது.

வில்லியனூரில் நடந்த மஞ்சள் நீராட்டு விழாவில் புதுவிதமாக நெல் ரகங்களின் வரிசை தட்டு வைக்கப்பட்டிருந்தது. 480 பாரம்பரிய நெல் ரகங்களை சேகரித்து அவற்றின் பெயர்களோடு பாக்கெட் போட்டு தாய்மாமன் சீர்வரிசையாக கொடுத்தார். நெல் ரகங்களின் சீர் தட்டுக்களை உறவினர்கள் ஆச்சரியத்துடன் பார்த்தனர்.

விவசாய விழாக்களில் நெல் வகைகளை வைத்தால் விவசாயிகள் மட்டும் பார்ப்பார்கள். இது போன்ற சுப நிகழ்ச்சிகளில் வைத்தால் இளம் தலைமுறையினர் பயன்பெறுவார்கள் என சீர்வரிசை கொடுத்தவர் தெரிவித்தார். 

Tags:    

Similar News