புதுச்சேரி

புதுச்சேரியில் 3 மாத்திரைகள் விற்பனை செய்ய தடை

Published On 2026-01-20 08:39 IST   |   Update On 2026-01-20 08:39:00 IST
  • மருந்து கடைகளில் உள்ள இருப்புகளின் நிலவரத்தை மருந்து கட்டுப்பாட்டுத்துறைக்கு தெரிவிக்க வேண்டும்.
  • மாத்திரைகளை அந்த நிறுவனங்களுக்கு திருப்பி அனுப்பி வைக்க வேண்டும்.

புதுச்சேரி:

புதுச்சேரி மருந்து கட்டுப்பாட்டுத்துறை அதிகாரி அனந்தகிருஷ்ணன் வெளியிட்டுள்ள உத்தரவில் கூறியிருப்பதாவது:-

குடல் சிகிச்சைக்காக பரிந்துரைக்கப்படும் இமாச்சல பிரதேசம், சிர்மூர் பகுதியில் இருந்து நோனிஸ் பார்மாசூட்டிக்கல் நிறுவனத்தின் தயாரிப்பான மாக்பான்சோ 40 மாத்திரை, கேரள மாநிலம் மற்றும் அகமதாபாத் பாவியா மாவட்டத்தில் இருந்து அபான் பார்மாசூட்டிக்கல் நிறுவனத்தின் தயாரிப்பான பெபாவிட் என்ற பெயரிலான பாராசிட்டிமல் 650 மி.லி. கிராம் மாத்திரை, ராஜஸ்தான் மாநிலம் பைவாதி பகுதியில் கார்னானி பார்மாசூட்டிக்கல் நிறுவனத்தின் தயாரிப்பான சங்காவதி 5 கிராம் ஆகிய 3 மாத்திரைகளின் விற்பனைக்கு தடை செய்யப்பட்டுள்ளன.

இந்த மாத்திரைகள் புதுவையில் உள்ள மருந்து கடைகளில் விற்பனை செய்யக்கூடாது. மேலும் மருந்து கடைகளில் உள்ள இருப்புகளின் நிலவரத்தை மருந்து கட்டுப்பாட்டுத்துறைக்கு தெரிவிக்க வேண்டும்.

அந்த மாத்திரைகளை அந்த நிறுவனங்களுக்கு திருப்பி அனுப்பி வைக்க வேண்டும்.

இவ்வாறு அந்த உத்தரவில் கூறப்பட்டுள்ளது.

இந்த உத்தரவு நகல் அனைத்து மொத்த மற்றும் சில்லரை மருந்து விற்பனை நிலையங்களுக்கு அனுப்பப்பட்டுள்ளது.

Tags:    

Similar News