Roller Coaster-இல் இருந்து கீழே விழுந்த இளம்பெண்.. வருங்கால கணவர் கண்முன்னே பிரிந்த உயிர்
- பிரியங்காவின் வருங்கால கணவர் நிகில் அவருடன் இருந்தார்.
- பிரியங்கா ஒரு தனியார் தொலைத்தொடர்பு நிறுவனத்தில் விற்பனை மேலாளராகப் பணிபுரிந்து வந்தார்.
டெல்லியில் உள்ள பொழுதுபோக்கு பூங்காவில் ஏற்பட்ட ரோலர் கோஸ்டர் விபத்தில் ஒரு இளம் பெண் பரிதாபமாக உயிரிழந்தார்.
இறந்தவர் டெல்லியைச் சேர்ந்த 24 வயது பிரியங்கா. தென்கிழக்கு டெல்லியில் உள்ள ஃபன் அண்ட் ஃபுட் வாட்டர் பார்க் -க்கு சென்றபோது இந்த விபத்து நிகழ்ந்துள்ளது. சம்பவம் நடந்த நேரத்தில் பிரியங்காவின் வருங்கால கணவர் நிகில் அவருடன் இருந்தார்.
கடந்த வியாழக்கிழமை, பிரியங்காவும் நிகிலும் மதியம் 1 மணியளவில் கேளிக்கை பூங்காவிற்கு வந்தனர். மாலை ஆறு மணிக்கு இருவரும் ரோலர் கோஸ்டரில் ஏறினார்கள்.
ஊஞ்சல் அதன் உச்சத்தை அடைந்தபோது, பிரியங்காவைத் தாங்கி நின்ற ஸ்டாண்ட் சரிந்து, அவர் தரையில் விழுந்தார். பிரியங்கா கீழே விழுந்து பலத்த காயமடைந்தார். உடனடியாக அவர் மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டார், ஆனால் அவர் இறந்துவிட்டதாக மருத்துவர்கள் தெரிவித்தனர்.
பிரியங்காவுக்கும் நிகிலுக்கும் ஜனவரி 2023 இல் நிச்சயதார்த்தம் நடந்தது. திருமணம் பிப்ரவரி 2026 இல் திட்டமிடப்பட்டது. பிரியங்கா ஒரு தனியார் தொலைத்தொடர்பு நிறுவனத்தில் விற்பனை மேலாளராகப் பணிபுரிந்து வந்தார்.