இந்தியா

பிரதமர் மோடி பரமாத்மா கதையை கொண்டு வந்தது ஏன் தெரியுமா?: ராகுல் காந்தி கூறும் விளக்கம்

Published On 2024-05-27 11:06 GMT   |   Update On 2024-05-27 11:06 GMT
  • நீண்ட தொடர்ச்சியான பேச்சுகளையும், நாட்டை பிளவுப்படுத்துவதையும் பிரதமர் மோடி நிறுத்திக்கொள்ள வேண்டும்.
  • நாட்டின் இளைஞர்களுக்கு நீங்கள் கொடுத்த வேலைவாய்ப்புகளை பற்றி பீகார் மக்களுக்கும், நாட்டு மக்களுக்கும் சொல்லுங்கள்.

பீகார் மாநிலத்தில் ராகுல் காந்தி தேர்தல் பிரசாரம் மேற்கொண்டார். அப்போது அவர் கூறியதாவது:-

பிரதமர் மோடி பரமாத்மா கதையை ஏன் கொண்டு வந்தார் என்று உங்களுக்கு தெரியுமா?. ஏனென்றால், தேர்தலுக்குப் பிறகு அமலாக்கத்துறை அதானி பற்றி நரேந்திர மோடியிடம் கேள்வி கேட்கும்போது, எனக்குத் தெரியாது என்று அவர் சொல்வார். பரமாத்மாதான் இப்படி கேட்கச் சொன்னார் என்று நழுவிக் கொள்வார்.

நீண்ட தொடர்ச்சியான பேச்சுகளையும், நாட்டை பிளவுப்படுத்துவதையும் பிரதமர் மோடி நிறுத்திக்கொள்ள வேண்டும். முதலில், நாட்டின் இளைஞர்களுக்கு நீங்கள் கொடுத்த வேலைவாய்ப்புகளை பற்றி பீகார் மக்களுக்கும், நாட்டு மக்களுக்கும் சொல்லுங்கள்.

மோடி 22, 25 பேர்களை ராஜா மற்றும் மகாராஜாவாக ஆக்கியுள்ளார். அவர்களுக்கு அதானி, அம்பானி என வெவ்வேறான பெயர்கள் உள்ளன. அந்த ராஜாக்களுக்காகவே 24 மணிநேரமும் உழைக்கிறார். இந்தியா கூட்டணி ஆட்சி அமைத்தபிறகு அக்னிபாத் திட்டத்தை நீக்குவோம். ஒவ்வொரு பெண்களின் வங்கி கணக்கிலும் மாதம் ரூ.8,500 டெபாசிட் செய்வோம். மூடப்பட்ட நிறுவனங்களை மீண்டும் திறப்போம். 30 லட்சம் காலி பணியிடங்களை நிரப்புவோம்.

இவ்வாறு ராகுல் காந்தி பேசினார்.

Tags:    

Similar News