இந்தியா

தேவ கவுடாவை சந்தித்த நிதி மந்திரி நிர்மலா சீதாராமன்

தேவ கவுடாவை நேரில் சந்தித்து நலம் விசாரித்தார் நிதி மந்திரி நிர்மலா சீதாராமன்

Update: 2022-09-29 23:07 GMT
  • தேவ கவுடாவிடம் நிதி மந்திரி நிர்மலா சீதாராமன் நலம் விசாரித்தார்.
  • இந்தச் சந்திப்பின்போது குமாரசாமி உடன் இருந்தார்.

பெங்களூரு:

முன்னாள் பிரதமர் தேவ கவுடா உடல்நலக் குறைவால் பெங்களூரு பத்மநாப நகரில் உள்ள தனது வீட்டில் ஓய்வு எடுத்து வருகிறார். அவரை முதல் மந்திரி பசவராஜ் பொம்மை, எதிர்க்கட்சி தலைவர் சித்தராமையா, முன்னாள் முதல் மந்திரி எடியூரப்பா உள்ளிட்ட பல்வேறு அரசியல் கட்சிகளின் தலைவர்கள் நேரில் சந்தித்து நலம் விசாரித்தனர்.

இந்நிலையில், தேவ கவுடாவை அவரது இல்லத்தில் மத்திய மந்திரி நிர்மலா சீதாராமன் நேற்று நேரில் சந்தித்துப் பேசினார். அப்போது, அவரது உடல்நிலை குறித்து கேட்டறிந்தார். மேலும் தேவ கவுடா விரைவாக குணம் அடைந்து வழக்கமான பணிகளில் ஈடுபட விரும்புவதாக கூறி வாழ்த்து தெரிவித்தார். இந்தச் சந்திப்பின்போது குமாரசாமி உடன் இருந்தார்.


Tags:    

Similar News