இந்தியா

முக்கியத்துவம் வாய்ந்த மத்திய பட்ஜெட்... நிர்மலா சீதாராமன் புதிய சாதனை

Published On 2026-02-01 07:32 IST   |   Update On 2026-02-01 07:32:00 IST
  • பிப்ரவரி 1-ந் தேதி பட்ஜெட் தாக்கல் செய்யப்பட வேண்டும் என்று அரசு உறுதியாக இருப்பதன் அடிப்படையில் இன்று காலை 11 மணிக்கு தாக்கல் செய்யப்படுகிறது.
  • பட்ஜெட்டின் 'B' பிரிவில் முக்கிய அறிவிப்புகளை வெளியிட உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.

அடுத்த நிதியாண்டுக்கான (2026-27) மத்திய பட்ஜெட் இன்று தாக்கல் செய்யப்படுகிறது. பொதுவாக ஞாயிற்றுக்கிழமைகளில் அரசு அலுவலகங்கள் இயங்காது. ஆனால் இந்த பட்ஜெட்டுக்காக இன்றைய தினம் பாராளுமன்றம் செயல்படுகிறது.

ஞாயிற்றுக்கிழமை பட்ஜெட் தாக்கல் செய்யப்படுவது வரலாற்றிலேயே இதுவே முதல் முறை. 1999-ம் ஆண்டு பிப்ரவரி மாதத்தின் கடைசி நாளான 28-ந்தேதி ஞாயிற்றுக்கிழமையாக இருந்தது. இதனால் பட்ஜெட் தாக்கலை ஒரு நாள் முன்பாக சனிக்கிழமைக்கு மாற்றினார்கள். அப்போது வாஜ்பாய் பிரதமராக இருந்தார்.

ஆனால் இன்றைய தினம் ஞாயிற்றுக்கிழமையாக இருந்தாலும் முறைப்படி பிப்ரவரி 1-ந் தேதி பட்ஜெட் தாக்கல் செய்யப்பட வேண்டும் என்று அரசு உறுதியாக இருப்பதன் அடிப்படையில் இன்று காலை 11 மணிக்கு தாக்கல் செய்யப்படுகிறது.

தொடர்ச்சியாக 9-வது முறையாக பாராளுமன்றத்தில் மத்திய பட்ஜெட்டை நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் தாக்கல் செய்கிறார். மேலும் ஒரே பிரதமரின் கீழ் 9-வது முறையாக நிதிநிலை அறிக்கையை வாசிக்கும் நிதியமைச்சர் என்ற பெருமையை நிர்மலா சீதாராமன் பெறுகிறார். முன்னாள் பிரதமர் மொரார்ஜி தேசாய் வெவ்வேறு காலக்கட்டங்களில் 10 முறை பட்ஜெட் தாக்கல் செய்திருந்தாலும், தொடர்ச்சியாக அதிக பட்ஜெட்களை (9 முறை) தாக்கல் செய்தவர் என்ற சாதனையை நிர்மலா சீதாராமன் தற்போது எட்டுகிறார்.

இதனிடையே, நீண்ட கால நடைமுறையை மாற்றி, பட்ஜெட்டின் 'B' பிரிவில் முக்கிய அறிவிப்புகளை வெளியிட உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. 

Tags:    

Similar News