இந்தியா

ஊடுருவல்காரர்களுக்கு புகலிடம் தரும் திரிணாமுல் அரசு: உள்துறை மந்திரி அமித் ஷா

Published On 2026-02-01 05:25 IST   |   Update On 2026-02-01 05:25:00 IST
  • ஊடுரு​வல் நடக்​கும் விதம், ஒட்​டுமொத்த நாட்​டுக்கே பாது​காப்​புப் பிரச்சினை​யாக மாறி​யுள்​ளது.
  • ஊடுரு​வல்​காரர்​களை அவர்​கள் தங்​கள் வாக்கு வங்கியாக கருது​வது​தான் இதற்​குக் காரணம்.

கொல்கத்தா:

மேற்கு வங்க மாநிலத்தில் இந்த ஆண்டு சட்டசபைத் தேர்தல் நடைபெற உள்ளது.

இந்நிலையில், வடக்கு 24 பர்கானாஸ் மாவட்டம் பாரக்பூரில் நடைபெற்ற பா.ஜ.க. தொண்டர்கள் கூட்டத்தில் உள்துறை மந்திரி அமித்ஷா பேசியதாவது:

மேற்கு வங்கத்தில் ஆளும் திரிணாமுல் காங்கிரஸ் அரசு வங்கதேச ஊடுருவல்காரர்களுக்கு புகலிடம் தருகிறது.

ஊடுருவல் நடக்கும் விதம், ஒட்டுமொத்த நாட்டுக்கே பாதுகாப்புப் பிரச்சினையாக மாறியுள்ளது.

நீதிமன்ற உத்தரவுக்குப் பிறகும் எல்லை வேலி அமைப்பதற்காக பிஎஸ்எப் படைகளுக்கு திரிணாமுல் அரசு நிலம் வழங்க மறுக்கிறது.

ஊடுருவல்காரர்களை அவர்கள் தங்கள் வாக்கு வங்கியாகக் கருதுவதுதான் இதற்குக் காரணம்.

மாநில காவல்துறை சட்டவிரோதக் குடியேறிகளைத் தடுப்பதில்லை. அவர்கள் போலி ஆவணங்கள் மூலம் நாடு முழுவதும்

அனுப்பப்படுகின்றனர்.

திரிணாமுல் ஆட்சியை வேரோடு பிடுங்கி எறிந்துவிட்டு தேசபக்தர்கள் மற்றும் தேசியவாதிகளின் அரசை நிறுவ வேண்டும்.

மேற்கு வங்கத்தில் பா.ஜ.க. அரசு அமைவது மாநிலத்துக்கு மட்டுமின்றி நாட்டின் பாதுகாப்புக்கும் முக்கியமானது என தெரிவித்தார்.

Tags:    

Similar News