இந்தியா

நாடாளுமன்றத்தில் மத்திய பட்ஜெட் இன்று தாக்கல்: சலுகைகளை எதிர்பார்க்கும் மக்கள்

Published On 2026-02-01 04:03 IST   |   Update On 2026-02-01 04:03:00 IST
  • நாடாளுமன்றத்தில் மத்திய பட்ஜெட்டை நிதி மந்திரி நிர்மலா சீதாராமன் இன்று தாக்கல் செய்கிறார்.
  • தேசிய பங்குச் சந்தை, மும்பை பங்குச் சந்தையில் சிறப்பு வர்த்தகம் நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

புதுடெல்லி:

பாராளுமன்ற பட்ஜெட் கூட்டத்தொடர் கடந்த 28-ம் தேதி தொடங்கியது. இரு அவைகளின் கூட்டுக்கூட்டத்தில் ஜனாதிபதி திரவுபதி முர்மு உரையாற்றினார்.

இதையொட்டி நாடாளுமன்றத்தில் பொருளாதார ஆய்வறிக்கை தாக்கல் செய்யப்பட்டது. அதில், பருவநிலை மாற்றத்தால் ஏற்படப்போகும் பாதிப்புகள் பற்றி சுட்டிக்காட்டப்பட்டன.

இந்நிலையில், மத்திய அரசின் 2026-27-ம் ஆண்டுக்கான பட்ஜெட் நாடாளுமன்றத்தில் இன்று தாக்கல் செய்யப்பட உள்ளது. மத்திய பட்ஜெட்டை நிதி மந்திரி நிர்மலா சீதாராமன் தாக்கல் செய்கிறார்.

பட்ஜெட் தாக்கல் செய்யப்பட உள்ளதால், இன்றைய தினம் சிறப்பு வர்த்தக நாளாக தேசிய பங்குச்சந்தை (என்எஸ்இ), மும்பை பங்குச் சந்தை (பிஎஸ்இ) அறிவித்துள்ளன. அதன்படி, இன்று காலை 9.15 மணி முதல் மாலை 3.30 மணி வரை பங்குச்சந்தைகளில் வர்த்தகம் வழக்கம்போல நடைபெறும்.

கடந்த 20 ஆண்டுகளில் முதல்முறையாக மத்திய பட்ஜெட் ஞாயிற்றுக்கிழமை தாக்கல் செய்யப்பட உள்ளது.

தமிழ்நாடு, புதுச்சேரி உள்ளிட்ட 5 மாநிலங்களில் தேர்தல் நடைபெற இருப்பதால் இந்த மாநிலங்களுக்கு புதிய அறிவிப்புகள் இடம்பெறலாம் என கூறப்படுகிறது.

தொடர்ந்து 9-வது முறையாக மத்திய பட்ஜெட்டை நிர்மலா சீதாராமன் தாக்கல் செய்ய உள்ளது குறிப்பிடத்தக்கது

Tags:    

Similar News