பஞ்சாபில் பிரதமர் மோடி செல்ல உள்ள வழிபாட்டு தலம், பள்ளிகளுக்கு வெடிகுண்டு மிரட்டல்
- ஜலந்தர் காவல்துறை மற்றும் வெடிகுண்டு செயலிழக்கும் நிபுணர்கள் சோதனை செய்தனர்.
- சைபர் கிரைம் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
குரு ரவிதாஸ் ஜெயந்தியை முன்னிட்டு நாளை (ஞாயிற்றுக்கிழமை) பிரதமர் மோடி பஞ்சாப் மாநிலம் ஜலந்தரில் புகழ்பெற்ற சீக்கிய மத வழிபாட்டுத் தலமான தேரா சச்கண்ட் பல்லானிற்கு செல்ல திட்டமிட்டுள்ளார்.
இந்தச் சூழலில், இன்று (சனிக்கிழமை) தேரா சச்கண்ட் பல்லானிற்கு மற்றும் ஜலந்தரில் உள்ள இரண்டு பள்ளிகளுக்கு வெடிகுண்டு வைக்கப்பட்டிருப்பதாக மிரட்டல் மின்னஞ்சல்கள் வந்தன.
இன்று விடுமுறை என்பதால் பள்ளிகளில் மாணவர்கள் யாரும் இல்லை. ஜலந்தர் காவல்துறை மற்றும் வெடிகுண்டு செயலிழக்கும் நிபுணர்கள் சம்பந்தப்பட்ட பள்ளிகள் மற்றும் தேரா பகுதிகளில் தீவிர சோதனையில் ஈடுபட்டனர். ஆனால் வெடிகுண்டு எதுவும் கிடைக்கவில்லை.
பிரதமர் வருகையை முன்னிட்டு ஜலந்தர் முழுவதும் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. மிரட்டல் மின்னஞ்சல் எங்கிருந்து வந்தது என்பது குறித்து சைபர் கிரைம் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.