மகாராஷ்டிர துணை முதல்வராக மறைந்த அஜித் பவாரின் மனைவி சுனேத்ரா பவார் பதவியேற்பு
- மேல்சபை எம்.பி.யாக சுனேத்ரா பவார் உள்ளார்.
- அதேநேரம் அவரது மேல்சபை எம்.பி. பதவியை அவரது மகன் பரத் பெறுகிறார்.
மராட்டிய மாநில துணை முதல்வராக இருந்த வரும், தேசியவாத காங்கிரஸ் தலைவருமான அஜித் பவார் கடந்த 28-ந்தேதி விமான விபத்தில் பலியானார்.
இதைத்தொடர்ந்து பா.ஜ.க-சிவசேனா கூட்டணியில் தேசியவாத காங்கிரசை தக்க வைத்துக் கொள்ளும் முயற்சியாக அஜித் பவார் மனைவி சுனேத்ரா பவாருக்கு துணை முதல்வர் பதவி வழங்க முடிவு செய்யப்பட்டது.
தற்போது மேல்சபை எம்.பி.யாக உள்ள சுனேத்ரா பவார் துணை முதல்வர் பதவிக்கான முன்மொழிவை அவர் ஏற்றுக்கொண்டார்.
இந்நிலையில் இன்று மாலை 5 மணியளவில் துணை முதல்வராக சுனேத்ரா பவார் பதவியேற்றுக் கொண்டார்.
மராட்டிய துணை முதல்வராக பதவி ஏற்கும் முதல் பெண் என்ற பெருமையை சுனேத்ரா பவார் பெறுகிறார்.
62 வயதான சுனேத்ரா பவார் கடந்த பாராளுமன்ற தேர்தலில் பாராமதி தொகுதியில் சுப்ரியா சுலேவிடம் தோற்றார்.
இதை தொடர்ந்து அவர் மேல்சபை எம்.பி. ஆனார். தற்போது துணை முதல்வர் ஆகியுள்ளார்.
சுனேத்ரா பவார் துணை முதல்வராக நீடிக்கவேண்டும் என்றால் தற்போது அவர் வகித்து வரும் எம்.பி பதவியை ராஜினாமா செய்துவிட்டு அஜித் பவரின் பாராமதி தொகுதி இடைத்தேர்தலில் வெல்ல வேண்டும். அதேநேரம் அவரது மேல்சபை எம்.பி. பதவியை அவரது மகன் பரத் பெறுகிறார்.