இந்தியா
வெனிசுலா இடைக்கால அதிபருடன் பேசிய பிரதமர் மோடி..!
- வெனிசுலா அதிபராக இருந்து மதுரோவை அமெரிக்கா சிறைப்பிடித்தது.
- இடைக்கால அதிபராக டெல்சி ரோட்ரிக்ஸ் பொறுப்பேற்றுள்ளார்.
வெனிசுலா அதிபராக மதுரோ இருந்து வந்தார். வெனிசுலா மீது தாக்குதல் நடத்திய அமெரிக்கா, மதுரோவை சிறைப்பிடித்து அமெரிக்காவுக்கு கொண்டு சென்றுள்ளது. அவர் அமெரிக்காவில் வழக்கை எதிர்கொள்ள வேண்டும் என டிரம்ப் தெரிவித்திருந்தார்.
அதனைத் தொடர்ந்து டெல்சி ரோட்ரிக்ஸ் இடைக்கால அதிபராக நியமனம் செய்யப்பட்டுள்ளார். இந்த நிலையில் இந்திய பிரதமர் மோடி, டெல்சி ரோட்ரிக்ஸ் உடன் இன்று பேசினார்.
அனைத்து பகுதிகளிலும் இருநாட்டு பார்ட்னர்ஷிப்பை விரிவுப்படுத்தியது, இந்தியா- வெனிசுலா உறவை புதிய உச்சத்திற்கு கொண்டு செல்வதற்கு இரு தலைவர்கள் ஒப்புக் கொண்டனர் என பிரதமர் மோடி அலுவலகம் தெரிவித்துள்ளது.