உறவினருடன் தகாத உறவு: கண்டித்த கணவனை கழுத்தை அறுத்து கொலை செய்த மனைவி
- உறவினருடன் இளம் பெண்ணுக்கு தொடர்பு ஏற்பட்டு தகாத உறவாக மாறியுள்ளார்.
- தகாத உறவை கண்டித்ததால், கணவனை தீர்த்துக்கட்டினார் மனைவி.
உத்தர பிரதேச மாநிலம் பத்பூரா கிராமத்தைச் சேர்ந்தவர் பல்ராம் (வயது 30). இவரது மனைவி பூஜா (25). பூஜாவுக்கும் அவருடைய மருமகன் ஆதேஷ்-க்கும் {nephew (வயது 22)} இடையில் தகாத உறவு இருந்துள்ளது. இது பல்ராமுக்கு தெரியவந்துள்ளது. அவர் இருவரையும் கண்டித்துள்ளார்.
இதனால் தகாத உறவுக்கு இடையூறாக இருந்த கணவனை மருமகன் உடன் சேர்ந்து கொலை செய்ய முடிவு செய்துள்ளார் பூஜா. சம்பவத்தன்று வீட்டில் தூங்கிக் கொண்டிருந்த கணவனின் காலை மருமகன் ஆதேஷ் பிடிக்க, பூஜா மார்பில் ஏறி உட்கார்ந்து கூர்மையாக அரிவாளால் கழுத்தை அறுத்து கொலை செய்துள்ளார்.
பல்ராம் கழுத்து அறுக்கப்பட்டு வீட்டில் பிணமாக கிடந்த நிலையில், அவரது சகோதரர் தனது அண்ணன் கொலையில் சந்தேகம் உள்ளது. அண்ணிக்கும், உறவினருக்கும் இடையில் தகாத உறவு இருந்தது. இதனால் கொலை செய்யப்பட்டிருக்கலாம் என புகார் அளித்திருந்தார்.
புகார் அடிப்படையில் போலீசார் பூஜாவிடம் நடத்திய விசாரணையில் அவர், தனது கணவரை கொலை செய்ததை ஒப்புக்கொண்டார். இதனைத் தொடர்ந்து இருவரும் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டனர்.