இந்தியா

வரதட்சணை கேட்டு Dumbell-ஆல் தலையில் அடித்த கணவர்.. டெல்லி பெண் போலீஸ் கமாண்டோ உயிரிழப்பு

Published On 2026-01-30 13:31 IST   |   Update On 2026-01-30 14:11:00 IST
  • SWAT சிறப்பு ஆயுத பிரிவில் கமாண்டோவாகப் பணியாற்றி வந்தார்.
  • உடற்பயிற்சி செய்யும் டம்பல் கொண்டு காஜலைத் தாக்கியதுடன், அவரது தலையைச் சுவரில் மோதியுள்ளார்.

கணவரால் கொடூரமாகத் தாக்கப்பட்ட டெல்லி பெண் காவலர் ஒருவர், மருத்துவமனையில் ஐந்து நாட்கள் உயிருக்கு போராடி வந்த நிலையில் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.

உயிரிழந்தவர் 27 வயதான காஜல் டெல்லி காவல்துறையின் சிறப்புப் பிரிவான SWAT சிறப்பு ஆயுதப்படைபப் பிரிவில் கமாண்டோவாகப் பணியாற்றி வந்தார்.

காஜலும் அங்குரும் நான்கு ஆண்டுகள் காதலித்து, கடந்த 2023 நவம்பரில் திருமணம் செய்து கொண்டனர். இவர்களுக்கு ஒன்றரை வயதில் ஆண் குழந்தை உள்ளது. தற்போது காஜல் மீண்டும் கர்பமாக இருந்துள்ளார். 

இந்நிலையில் கடந்த சில நாட்களுக்கு முன்பு, காஜலின் கணவர் அங்குர் சவுத்ரி, உடற்பயிற்சி செய்யும் டம்பல் கொண்டு காஜலைத் தாக்கியதுடன், அவரது தலையைச் சுவரில் மோதியுள்ளார். இதில் பலத்த காயமடைந்த காஜலின் மூளை செயலிழந்தது.

காஜலிடம் கூடுதல் வரதட்சணையாகப் பணம் மற்றும் கார் கேட்டு அவரது கணவர் தொடர்ந்து சித்திரவதை செய்து வந்ததாகக் காஜலின் குடும்பத்தினர் குற்றம் சாட்டியுள்ளனர்.    

அங்குர் சவுத்ரியைக் காவல்துறையினர் கைது செய்துள்ளனர். ஒரு பெண் கமாண்டோவிற்கே வரதட்சணைக் கொடுமையால் இந்த நிலை ஏற்பட்டது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.   

Tags:    

Similar News