இந்தியா

மகாத்மா காந்தி நினைவிடத்தில் ஜனாதிபதி திரவுபதி முர்மு, பிரதமர் மோடி மரியாதை

Published On 2026-01-30 12:11 IST   |   Update On 2026-01-30 12:11:00 IST
  • காந்தி நினைவிடத்தில் துணை ஜனாதிபதி சி.பி.ராதாகிருஷ்ணன், பிரதமர் மோடி ஆகியோர் மலர்தூவி மரியாதை செலுத்தினர்.
  • காந்தியின் ஆளுமையும் செயல்களும் நாட்டு மக்களை கடமையின் பாதையில் நடக்க என்றென்றும் ஊக்குவிக்கும்.

மகாத்மா காந்தியின் 79-வது நினைவுநாளையொட்டி டெல்லி ராஜ்காட்டில் உள்ள அவரது நினைவிடத்தில் ஜனாதிபதி திரவுபதி முர்மு மலர்வளையம் வைத்து மரியாதை செலுத்தினார். அவரைத்தொடர்ந்து துணை ஜனாதிபதி சி.பி.ராதாகிருஷ்ணன், பிரதமர் மோடி ஆகியோர் மலர்தூவி மரியாதை செலுத்தினர். அவரை தொடர்ந்து மத்திய அமைச்சர்கள் அமித் ஷா, ராஜ்நாத் சிங் உள்ளிட்டோர் மலர்தூவி மரியாதை செலுத்தினர்.

இந்நிலையில் பிரதமர் மோடி வெளியிட்டுள்ள எக்ஸ் தள பதிவில்,

தேசப்பிதா மகாத்மா காந்தியின் நினைவு நாளில் அவருக்கு எனது நூறு மடங்கு வணக்கங்கள். மதிப்பிற்குரிய பாபு எப்போதும் சுதேசிக்கு வலுவான முக்கியத்துவம் அளித்தார். இது வளர்ந்த மற்றும் தன்னம்பிக்கை கொண்ட இந்தியாவிற்கான நமது உறுதிப்பாட்டின் அடிப்படைத் தூணாகும். அவரது ஆளுமையும் செயல்களும் நாட்டு மக்களை கடமையின் பாதையில் நடக்க என்றென்றும் ஊக்குவிக்கும் என்று தெரிவித்துள்ளார்.

Tags:    

Similar News