இந்தியா

பிரதமர் மோடியுடன் முப்படை தளபதிகள் தீவிர ஆலோசனை

Published On 2025-05-10 13:23 IST   |   Update On 2025-05-10 13:23:00 IST
  • தேசிய பாதுகாப்புக்குழு தலைவர் அஜித் தோவல் பிரதமர் மோடியை சந்தித்து பேசினார்.
  • பாகிஸ்தான் அத்துமீறலை அதிகரித்து வரும் நிலையில் அடுத்தகட்ட நடவடிக்கைகள் குறித்தும் ஆலோசனை நடத்தி வருகின்றனர்.

இந்தியா- பாகிஸ்தான் இடையே எல்லை பகுதியில் பதற்றம் நிலவி வரும் நிலையில் 3-வது நாளாக பாகிஸ்தான் தாக்குதல் நடத்தி வருகிறது.

நேற்று உச்சகட்டமாக காஷ்மீர், பஞ்சாப், ராஜஸ்தான் மற்றும் குஜராத் மாநிலங்களை குறி வைத்து பாகிஸ்தான் நடத்திய தாக்குதலை இந்தியா முறியடித்தது. மேலும் பாரமுல்லா, ஸ்ரீநகர், அவந்திப்புரா, ஜம்மு உள்பட இந்தியாவின் 26 இடங்களை குறிவைத்து பாகிஸ்தான் நடத்திய ட்ரோன் தாக்குதலை வானிலேயே அழித்ததாக இந்திய ராணுவம் தெரிவித்துள்ளது.

இந்தியா - பாகிஸ்தான் இரு நாடுகள் இடையேயான மோதலுக்கு பிறகு முதன்முறையாக பாகிஸ்தான் ராணுவ அதிகாரிகள், இந்திய ராணுவ அதிகாரிகளுடன் தொலைபேசியில் பேசியதாகவும், இந்தியா தரப்பு அதிகாரிகளை நேரடியாக சந்தித்து பேச பாகிஸ்தான் விருப்பம் தெரிவித்ததாக தகவல் வெளியாகி இருந்தது.

தேசிய பாதுகாப்புக்குழு தலைவர் அஜித் தோவல் இன்று காலை பிரதமர் மோடியை சந்தித்து பேசிய நிலையில், தற்போது முப்படை தளபதிகள் பிரதமர் மோடியுடன் ஆலோசனையில் ஈடுபட்டுள்ளனர்.

இருதரப்பும் பேச்சுவார்த்தை நடத்த உதவுவதாக அமெரிக்கா கூறி உள்ள நிலையில் பிரதமர் மோடியுடன் முப்படை தளபதிகள் ஆலோசனை நடத்தி வருகின்றனர்.

பாகிஸ்தான் அத்துமீறலை அதிகரித்து வரும் நிலையில் அடுத்தகட்ட நடவடிக்கைகள் குறித்தும் ஆலோசனை நடத்தி வருகின்றனர்.

Tags:    

Similar News