இந்தியா

VIDEO: நவி மும்பை சர்வதேச விமான நிலையத்தில் தரையிறங்கிய முதல் விமானத்திற்கு வாட்டர் சல்யூட்

Published On 2025-12-25 12:42 IST   |   Update On 2025-12-25 12:45:00 IST
  • ரூ.19 ஆயிரத்து 650 கோடி மதிப்பீட்டில் நவி மும்பை விமான நிலையத்தின் முதல்கட்ட பணி நிறைவு பெற்றது.
  • நவி மும்பை விமான நிலைய திறப்பு விழாவில் தொழிலதிபர் கௌதம் அதானி கலந்து கொண்டார்.

நாட்டின் மிகப்பெரிய விமான நிலையமாக உருவெடுக்கும் நவி மும்பை சர்வதேச விமான நிலையத்தில் 4 கட்டங்களாக பணி மேற்கொள்ளப்பட்டு வருகிறது. இதில் ரூ.19 ஆயிரத்து 650 கோடி மதிப்பீட்டில் முதல்கட்ட பணி நிறைவு பெற்றது.

இதனையடுத்து அக்டோபர் 8 ஆம் தேதி நவி மும்பை சர்வதேச விமான நிலையத்தின் முதல் கட்டத்தை பிரதமர் மோடி திறந்து வைத்தார்.

இந்நிலையில், நவி மும்பை சர்வதேச விமான நிலையம் தனது முதல் வணிக விமானத்தின் வருகையுடன் தனது செயல்பாடுகளைத் தொடங்கியது. அந்த விமானம் வந்தடைந்தபோது, அதற்கு பாரம்பரியமான நீர் பீரங்கி மரியாதை அளிக்கப்பட்டது.

பெங்களூரில் இருந்து வந்த இண்டிகோ விமானம் 6E460, நவி மும்பை சர்வதேச விமான நிலையத்தின் முதல் விமானமாக காலை 08:00 மணிக்கு தரையிறங்கியது. அதற்கு பாரம்பரிய நீர் பீரங்கி மரியாதை அளிக்கப்பட்டு வரவேற்கப்பட்டது.

இதைத் தொடர்ந்து, விமான நிலையத்தின் முதல் புறப்பாடாக, ஹைதராபாத்திற்குச் செல்லும் இண்டிகோ விமானம் 6E882 காலை 08:40 மணிக்கு புறப்பட்டுச் சென்றது.

நவி மும்பை சர்வதேச விமான நிலையத்தின் செயல்பாடுகள் தொடங்கிய நிலையில், அதானி குழுமத்தின் தலைவர் கௌதம் அதானி இன்று விமான நிலையதிக்ரு வருகை தந்தார்.

Tags:    

Similar News