இந்தியா

2023ல், 50ல் இருந்து 100 சதவீதம் லாபம் தந்த 5 பங்குகள்

Published On 2024-01-05 10:51 GMT   |   Update On 2024-01-05 10:51 GMT
  • சந்தையில் முதலீடு சுமார் ரூ.82 லட்சம் கோடியாக அதிகரித்தது
  • 5 பங்குகள் முதலீட்டாளர்களுக்கு லாபம் தருவதில் முன்னிலை வகித்தன

கடந்த 2023ல் இந்திய பங்கு சந்தை சுமார் 20 சதவீதம் முதலீட்டாளர்களுக்கு லாபத்தை தந்தது.

சந்தை மூலதன மதிப்பின்படி அமெரிக்கா, சீனா, ஜப்பான் மற்றும் ஹாங்காங் நாடுகளின் பங்கு சந்தைக்கு அடுத்த இடத்தில் இந்தியா உருவெடுத்தது.

மியூச்சுவல் ஃபண்டுகளின் பெருக்கம், அயல்நாட்டு முதலீடு அதிகரிப்பு, பொருளாதார நிலையில் வளர்ச்சி, கார்ப்பரேட் நிறுவனங்களின் வருவாய் அதிகரிப்பு உள்ளிட்டவை இதற்கு காரணங்களாக சொல்லப்படுகின்றன.

சந்தை முதலீடு சுமார் ரூ.82 லட்சம் கோடி எனும் அளவில் அதிகரித்தது.

2023ல் சென்செக்ஸ் குறியீட்டில் 5 பங்குகள் மிக அதிக லாபம் ஈட்டி தந்தன.

பெருமளவு உயர்வை கண்ட பங்குகள்:

1. டாடா மோட்டார்ஸ் (Tata Motors) - 102 சதவீதம்

2. என்டிபிசி லிமிடெட் (NTPC) - 96 சதவீதம்

3. லார்சன் அண்ட் டூப்ரோ லிமிடெட் (L&T) - 69 சதவீதம்

4. பவர் க்ரிட் கார்ப்பரேஷன் (Power Grid) - 55 சதவீதம்

5. அல்ட்ரா டெக் சிமென்ட் (Ultra Tech Cement) - 51 சதவீதம்

பங்குகளின் விலை, சந்தை நிலவரத்தை பொறுத்து மாறுபடும் என்பதால் தகுந்த பங்கு சந்தை வல்லுனர்களின் ஆலோசனைப்படி பங்குகளில் முதலீடு செய்து வருவது முதலீட்டாளர்களுக்கு பயன் தரும் என பொருளாதார நிபுணர்கள் அறிவுறுத்துகிறார்கள்.

Tags:    

Similar News