இந்தியா

டெல்லியில் குடியரசு தலைவரை சந்தித்த ஐ.நா தலைவர்

Published On 2024-01-24 16:16 GMT   |   Update On 2024-01-24 16:16 GMT
  • இந்தியாவில் சுற்றுப்பயணம் மேற்கொள்ளும் ஐ.நா. தலைவர், இன்று குடியரசு தலைவர் திரவுபதி முர்முவை சந்தித்தார்.
  • ஜன.26 ஆம் தேதி மகாராஷ்டிராவில் நடைபெறும் குடியரசு தின விழாவில் சிறப்பு விருந்தினராக பங்கேற்கிறார்.

ஐக்கிய நாடுகள் பொதுச்சபையின் 78 வது கூட்டத்தொடரின் தலைவராக பதவி வகிப்பவர் டென்னிஸ் பிரான்சிஸ். இந்தியாவில் 5 நாள் சுற்றுப்பயணம் மேற்கொள்ளும் இவர், டெல்லி ராஷ்டிரபதி பவனில் குடியரசு தலைவர் திரவுபதி முர்முவை இன்று சந்தித்தார்.

ஐ.நா பொதுச்சபையின் தலைவரை இந்தியாவிற்கு வரவேற்ற முர்மு, காலநிலை மாற்றம் மற்றும் பெண்களுக்கு அதிகாரமளித்தல் உள்ளிட்ட முக்கிய முயற்சிகளை மேற்கொண்டுள்ளதற்கு பாராட்டு தெரிவித்தார். மேலும், ஐ.நா. பாதுகாப்பு கவுன்சிலில் வளரும் நாடுகளையும் உறுப்பினராக சேர்ப்பது உள்ளிட்ட சீர்திருத்தங்கள் பற்றி ஆலோசனை மேற்கொண்டிருக்கலாம் எனக் கூறப்படுகிறது.

ஐ.நா–இந்தியா இடையேயான உறவுகளை வலுப்படுத்துவதற்கான வாய்ப்பாக, பொதுச்சபைத் தலைவர் டென்னிஸ் பிரான்சிஸின் சுற்றுப்பயணம் இருக்கும் என்று கருதப்படுகிறது. அதனைத் தொடர்ந்து, ஜன.26 ஆம் தேதி மகாராஷ்டிராவில் நடைபெறும் குடியரசு தின விழாவில் சிறப்பு விருந்தினராக பங்கேற்கிறார்.

Tags:    

Similar News