இந்தியா

"தாத்தாவுக்கு ஆயுசு கெட்டி" - உறவினர்கள் இன்ப அதிர்ச்சி

Published On 2024-01-13 08:32 GMT   |   Update On 2024-01-13 08:32 GMT
  • உயிரிழந்ததாக எண்ணிய 80 வயதான முதியவர் இப்போது கர்னாவில் உள்ள மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார்.
  • சாலையில் இருந்த பள்ளத்தில் ஆம்புலன்ஸ் வாகனம் மோதியதில் மீண்டும் உயிர் பெற்றார்

ஹரியானா-வை சேர்ந்த 80 வயதான முதியவர் தர்ஷன் சிங் பிரார். உடல் நலம் சரியில்லாத நிலையில் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்தார். சிகிச்சை பலனின்றி இறந்துவிட்டதாக மருத்துவர்கள் தெரிவித்ததையடுத்து, மருத்துவமனையில் இருந்து கர்னால் அருகே உள்ள அவரது வீட்டிற்கு ஆம்புலன்ஸ் மூலம் அவரது உடல் கொண்டு செல்லப்பட்டது. அவரது இல்லத்தில் இறுதி சடங்கிற்கான ஏற்பாடுகள் அனைத்தும் செய்யப்பட்டிருந்தன. மருத்துவமனையில் இருந்து வீட்டிற்கு வந்துகொண்டிருந்த போது, ஹரியானா மாநிலம் கைதலில் உள்ள தண்ட் கிராமத்திற்கு அருகே ஆம்புலன்ஸ் சென்றபோது, பள்ளத்தில் சிக்கியது. அதன் பின்னர் நடந்த சம்பவம் அனைவருக்கும் ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது. உயிரிழந்த தர்ஷன் சிங் பிராரின் கைகளில் அசைவு ஏற்பட்டது. அதனை கவனித்த குடும்பத்தினர், அருகில் உள்ள ராவல் மருத்துவமனைக்கு அழைத்து சென்றனர். அங்கு அவரை பரிசோதனை செய்த மருத்துவர்கள் தர்ஷன் சிங் உயிருடன் இருப்பதாக தெரிவித்தனர்.

உயிரிழந்ததாக எண்ணிய 80 வயதான முதியவர் இப்போது கர்னாவில் உள்ள மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார்.இதுகுறித்து தர்ஷன் சிங்-ன் பேரனான பல்வான் சின் கூறுகையில், "உடல் நலம் சரியில்லாத நிலையில் தாத்தாவை மருத்துவமனைக்கு அழைத்து சென்றோம். அங்கு அவர் நான்கு நாட்களாக வெண்டிலேட்டரில் இருந்தார். பின்னர் இதய துடிப்பு நின்றுவிட்டதாக மருத்துவர்கள் தெரிவித்தனர். அதனை தொடர்ந்து, இறுதி சடங்கிற்கான ஏற்பாடுகள் செய்யப்பட்டிருந்ததாக தெரிவித்தார். உயிரிழந்ததாக எண்ணிய 80 வயதான முதியவர் இப்போது கர்னாவில் உள்ள மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார்.அதனைதொடர்ந்து "தாத்தா இப்போது உயிருடன் இருப்பது ஒரு அதிசயம், அவர் விரைவில் குணமடைவார் என்று நாங்கள் நம்புகிறோம்" என தெரிவித்தார்.

இதுகுறித்து ராவல் மருத்துவமனையை சேர்ந்த மருத்துவர்கள் கூறியதாவது, "நோயாளி இறந்துவிட்டார் என சொல்ல முடியாது. அவரை எங்களிடம் கொண்டு வந்த போது, அவருக்கு மூச்சு திணறல் இருந்தது, இரத்த அழுத்தம் மற்றும் துடிப்பு இருந்தது. மற்ற மருத்துவமனையில் என்ன நடந்தது என்பது எங்களுக்கு தெரியாது என்றும், தொழில்நுட்ப பிழை ஏற்பட்டிருக்கலாம் எனவும் கூறினர்

Tags:    

Similar News