இந்தியா

காங்கிரஸ் கட்சிக்கு இதே வேலையா போச்சு.. சோனியா காந்திக்கு பதில் அளித்த மத்திய மந்திரி

Published On 2023-09-06 16:29 GMT   |   Update On 2023-09-06 16:29 GMT
  • பாராளுமன்ற சிறப்பு கூட்டம் எதற்காக கூட்டப்படுகிறது என்ற காரணம் தெரியாது.
  • மக்கள் பிரச்சினைகளை எழுப்பி, அதுபற்றிய விவாதம் நடத்துவதற்கு இது வாய்ப்பளிக்கிறது.

பாராளுமன்ற சிறப்பு கூட்டம் எதற்காக நடத்தப்படுகிறது என்பது பற்றி விளக்கம் அளிக்க பிரதமர் நரேந்திர மோடிக்கு, காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி கடிதம் எழுதி இருந்தார். அதில் "மற்ற அரசியல் கட்சிகளுடன் கலந்து ஆலோசனை செய்யாமலேயே இந்த பாராளுமன்ற சிறப்பு கூட்டம் கூட்டப்படுகிறது. எதற்காக இந்த பாராளுமன்ற சிறப்பு கூட்டம் கூட்டப்படுகிறது என்ற காரணம் எதுவுமே எங்களுக்கு தெரியாது. ஐந்து நாட்களுக்கு அரசு அலுவல் பணிகளுக்காக ஒதுக்கப்பட்டு இருப்பது பற்றிய தகவல் மட்டுமே எங்களுக்கு வழங்கப்பட்டு இருக்கிறது."

"பாராளுமன்ற சிறப்பு கூட்டத்தில் நிச்சயம் கலந்து கொள்ள வேண்டும். ஏனென்றால், இதில் மக்கள் பிரச்சினைகளை எழுப்பி, அதுபற்றிய விவாதம் நடத்துவதற்கு இது வாய்ப்பளிக்கிறது. அந்த வகையில் இந்த முறை சரியான விதிகளுடன் விவாதம் மற்றும் ஆலோசனைகளை செய்வதற்கு நேரம் ஒதுக்கப்படும் என்று நம்புகிறேன்," என்று அவர் தெரிவித்து இருந்தார்.

 

இதற்கு பதில் அளித்து இருக்கும், பாராளுமன்ற விவகாரங்கள் துறை மந்திரி பிரகலாத் ஜோஷி, "காங்கிரஸ் கட்சிக்கு குடியரசு விதிமுறைகள் மற்றும் பழக்கவழக்கங்களில் துளியும் நம்பிக்கையே இல்லை. பாராளுமன்ற விவகாரங்கள் குறித்து தேவையற்ற குழப்பம் ஏற்படுத்துவது காங்கிரஸ் கட்சியின் பழக்கமாக மாறிவிட்டது."

"பாராளுமன்ற சிறப்பு கூட்டம் கூட்டுவது தொடர்பாக அனைத்து சட்டப்பூர்வமான மற்றும் பாராளுமன்ற விதிகளும் முறையாக பின்பற்றப்பட்டு உள்ளன. இதன் காரணமாக எதிர்கட்சியினர் வரவிருக்கும் பாராளும்ற சிறப்பு கூட்டத்தை ஆரோக்கியமான ஒன்றாகவும், ஆக்கப்பூர்வ பேச்சுவார்த்தையை நடத்தவும் வலியுறுத்துகிறேன்," என்று தெரிவித்து இருக்கிறார். 

Tags:    

Similar News