இந்தியா

உ.பி.யில் மருத்துவ மாணவி தற்கொலை.. 2 பேராசிரியர்கள் மீது பகீர் புகார் - மாணவர்கள் போராட்டம்

Published On 2025-07-19 16:22 IST   |   Update On 2025-07-19 16:39:00 IST
  • அவர்களும் அதே உணர்வை அனுபவிக்க வேண்டும் என்று நான் விரும்புகிறேன்
  • போராட்டக்காரர்களுக்கும் போலீசாருக்கும் இடையே தள்ளுமுள்ளு ஏற்பட்டது.

உத்தரப் பிரதேசத்தின் குருகிராமை சேர்ந்த ஜோதி ஷர்மா (21 வயது) நொய்டாவில் உள்ள தனியார் பல்கலைக்கழகத்தில் இரண்டாம் ஆண்டு பல் மருத்துவம் பயின்று வந்தார்.

இந்நிலையில் நேற்று இரவு பல்கலைக்கழகத்தின் விடுதி அறையில் அவர் தற்கொலை செய்து கொண்டார்.

ஜோதி ஷர்மா எழுதி வைத்த தற்கொலைக் குறிப்பில், இரண்டு பேராசிரியர்கள் மற்றும் பல்கலைக்கழக நிர்வாகம் மனரீதியாக தன்னை துன்புறுத்தியதாக குற்றம் சாட்டியுள்ளார்.

மேலும், "அவர்கள் சிறைக்குச் செல்ல வேண்டும் என்று நான் விரும்புகிறேன். அவர்கள் என்னை மனரீதியாக துன்புறுத்தினர். அவர்கள் என்னை அவமானப்படுத்தினர். நான் நீண்ட காலமாக இந்த மன அழுத்தத்தில் இருக்கிறேன். அவர்களும் அதே உணர்வை அனுபவிக்க வேண்டும் என்று நான் விரும்புகிறேன்" என்று ஜோதி தனது தற்கொலைக் குறிப்பில் எழுதியுள்ளார்.

இதையடுத்து பல்கலைக்கழக நிர்வாகத்தின் அலட்சியத்தை கண்டித்து மாணவர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

போராட்டத்தின் போது போராட்டக்காரர்களுக்கும் போலீசாருக்கும் இடையே தள்ளுமுள்ளு ஏற்பட்டது. வைரலாகி வரும் ஒரு வீடியோவில், ஜோதியின் பெற்றோர் பல் மருத்துவத்துறை HODயை கன்னத்தில் அறைவது பதிவாகி உள்ளது.

பின்னர் போலீஸ் அதிகாரிகளுடன் பேச்சுவார்த்தை மூலம் போராட்டம் நிறுத்தப்பட்டது. சம்பவம் தொடர்பாக இரண்டு பல்கலைக்கழக ஊழியர்களை போலீசார் கைது செய்துள்ளனர்.

மேலும் பல்கலைக்கழகத்தின் மக்கள் தொடர்பு அதிகாரி அஜித் குமார், இரண்டு ஆசிரியர்கள் இடைநீக்கம் செய்யப்பட்டுள்ளனர்.

Tags:    

Similar News