இந்தியா

வாக்கிங் சென்றவர்களை பலி வாங்கிய கார்.. குலைநடுங்க வைக்கும் கோர விபத்து

Published On 2023-07-04 18:06 IST   |   Update On 2023-07-04 18:56:00 IST
  • 3 பேரும் வாக்கிங் சென்றபோது பின்னால் வந்த கார் பயங்கரமாக மோதியது.
  • கடந்த மே மாதம் பார்க்கிங் செய்யப்பட்டிருந்த லாரி மீது கார் மோதியதில் 3 வாலிபர்கள் பலியாகினர்.

தெலுங்கானா மாநிலம் ஐதராபாத்தில் அதிவேகமாக வந்த கார் மோதியதில் இரண்டு பெண்கள், ஒரு குழந்தை உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.

ஐதராபாத் ஐதர்ஷாக்கோட் பிரதான சாலையின் ஓரத்தில் 3 பேரும் வாக்கிங் சென்றபோது பின்னால் வந்த கார் பயங்கரமாக மோதியது. மோதிய வேகத்தில் 3 பேரும் தூக்கி வீசப்பட்டு உயிரிழந்தனர். இதுதொடர்பாக நர்சனிகி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டுள்ளனர்.

இந்த கொடூர விபத்து தொடர்பாக, அங்குள்ள இரண்டு சிசிடிவி கேமராக்களில் பதிவான வீடியோக்கள் வைரலாகிவருகின்றன.

இதேபோல் கடந்த மே மாதம் பார்க்கிங் செய்யப்பட்டிருந்த லாரி மீது கார் மோதியதில் 3 வாலிபர்கள் பலியானது குறிப்பிடத்தக்கது.

Tags:    

Similar News