இந்தியா
'பொடி இட்லி' முதல் 'பிரியாணி' வரை... ஏர் இந்தியா Menu-வில் தென்னிந்திய உணவுகள் - அசத்தல் அறிவிப்பு
- பயணிகளுக்கு வழங்கப்படும் உணவுகளில், பல்வேறு தென் மாநில உணவு வகைகள் புதிதாக சேர்ப்பு
- முந்திரி உப்புமா, சாம்பார், மசால் தோசை, கிச்சடி, பரோட்டா ஆகிய உணவு வகைகள் சேர்ப்பு
வெளிநாடுகளுக்குச் செல்லும் தங்களது விமானங்களில் பயணிகளுக்கு தென்னிந்தியவின் சிறப்பான உணவுகளை இலவசமாக வழங்கப் போவதாக ஏர் இந்தியா அறிவித்துள்ளது.
தமிழ்நாட்டு உணவான மிளகாய்ப் பொடி இட்லி, முந்திரி உப்புமா, மினி மைசூர் மசால் தோசை, கிச்சடி, பரோட்டா, சாம்பார், மூன்று வகை சட்னிகளான தேங்காய் சட்னி, கார சட்னி, புதினா சட்டினி உள்ளிட்டவையும் வழங்கப்படும் என்று ஏர் இந்தியா தெரிவித்துள்ளது.
இந்த அறிவிப்பால் தமிழக பயணிகள் உற்சாகம் அடைந்துள்ளனர். அதே சமயம் பிரியாணி, மலபாரி கோழிக் கறி, சிக்கன் பிம்பாப் உள்ளிட்ட அசைவ உணவுகளும் வழங்கப்படும் என்று ஏர் இந்தியா அறிவித்துள்ளது.