இந்தியா

தனிஷ் அலியை நேரில் சந்தித்த ராகுல் காந்தி.. என்ன சொன்னாரு தெரியுமா?

Published On 2023-09-22 20:44 IST   |   Update On 2023-09-22 20:44:00 IST
  • பாராளுமன்றத்தில் பா.ஜ.க. எம்.பி.யின் தரக்குறைவான கருத்துக்கள் சலசலப்பை ஏற்படுத்தி உள்ளன.
  • பகுஜன் சமாஜ் கட்சி எம்.பி. தனிஷ் அலியை நேரில் சந்தித்தார் ராகுல் காந்தி.

காங்கிரஸ் தலைவர்கள் ராகுல் காந்தி மற்றும் கே.சி. வேணுகோபால் பகுஜன் சமாஜ் கட்சி எம்.பி. தனிஷ் அலியை நேரில் சந்தித்து தங்களின் ஆதரவை தெரிவித்தனர். தனிஷ் அலியுடனான சந்திப்பு தொடர்பாக தனது எக்ஸ் தளத்தில் கருத்து பதிவிட்டு இருக்கும் ராகுல் காந்தி, எதிர்ப்புகள் நிறைந்த சந்தையில், அன்புக்கும் இடமுண்டு என்று தெரிவித்து உள்ளார்.

பாராளுமன்ற சிறப்பு கூட்டத்தில் சந்திரயான் 3 குறித்த விவாதத்தின் போது, பா.ஜ.க. எம்.பி. ரமேஷ் பிதூரி தனிஷ் அலியை தன் மதத்துடன் தொடர்புப்படுத்தி தீவிரவாதி, பயங்கரவாதி என்றும் கொச்சையான வார்த்தைகளால் வசைபாடிய விவகாரம் சர்ச்சையை ஏற்படுத்தியது.

இதனிடையே ராகுல் காந்தி உடனான சந்திப்பு குறித்து பேசிய தனிஷ் அலி, "எனது மன உறுதியை அதிகப்படுத்தவும், தனது ஆதரவை தெரிவிக்கவும் அவர் இங்கே வந்திருந்தார். மேலும், நான் தனியாக இல்லை என்றும் ஜனநாயகத்திற்கு ஆதரவாக இருக்கும் அனைவரும் என்னுடன் நிற்பதாகவும் அவர் தெரிவித்தார்," என்று தெரிவித்து உள்ளார்.

Tags:    

Similar News