ராகுல் காந்தி பேரணி- மு.க.ஸ்டாலின், கனிமொழி, தேஜஸ்வி பங்கேற்றனர்
- தனி விமானம் மூலம் பீகாருக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் காலை புறப்பட்டார்.
- தர்பங்காவில் திறந்தவெளி ஜீப்பில் ராகுல் காந்தி, பிரியங்கா காந்தியுடன் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பேரணியாக சென்றார்.
பீகார் மாநிலத்தில் வாக்காளர் பட்டியல் சிறப்பு திருத்தத்தின் மூலம் 65 லட்சம் பேர் நீக்கப்பட்டுள்ளனர். இந்த ஆண்டு இறுதியில் பீகாரில் சட்டசபை தேர்தல் நடைபெற உள்ள நிலையில், இந்திய தேர்தல் ஆணையத்தின் நடவடிக்கை பெரிதும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
தேர்தல் ஆணையம் பா.ஜ.க.வுடன் இணைந்து சட்டசபை மற்றும் மக்களவை தேர்தலில் வாக்கு திருட்டில் ஈடுபட்டதாக மக்களவை எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தி குற்றம்சாட்டினார்.
'வாக்கு திருட்டு' தொடர்பாக வாக்காளர்களிடையே விழிப்புணர்வை ஏற்படுத்தும் நோக்கில் வரும் கடந்த 17-ந்தேதி முதல் 15 நாட்களுக்கு பீகாரில் ராகுல் காந்தி நடைபயணம் மேற்கொண்டுள்ளார்.
ராகுல் காந்தியின் நடைபயணத்தில் பங்கேற்க சென்னையில் இருந்து தனி விமானம் மூலம் பீகாருக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்று காலை புறப்பட்டார்.
இந்நிலையில் வாக்கு திருட்டுக்கு எதிராக பீகாரில் ராகுல் காந்தி மேற்கொண்டுள்ள பேரணியில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பங்கேற்றார். தர்பங்காவில் திறந்தவெளி ஜீப்பில் ராகுல் காந்தி, பிரியங்கா காந்தியுடன் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பேரணியாக சென்றார்.
இந்த பேரணியில் தி.மு.க. எம்.பி. கனிமொழி, பீகார் எதிர்க்கட்சித் தலைவர் தேஜஸ்வி யாதவ் ஆகியோரும் பங்கேற்றனர்.