இந்தியா
'வாக்குத் திருட்டு' தொடர்பான ஹைட்ரஜன் குண்டை இன்று வெளியிடுகிறார் ராகுல் காந்தி
- வாக்கு திருட்டில் பாஜக மற்றும் தேர்தல் ஆணையம் ஈடுபட்டுள்ளதாக ராகுல் காந்தி குற்றம்சாட்டினார்.
- 'THE H FILES' என்ற தலைப்பில் இன்று செய்தியாளர்களை சந்திக்கிறார் ராகுல் காந்தி.
கடந்த செப்டம்பர் மாதம் கர்நாடக மாநிலம் ஆலந்து தொகுதியில் சுமார் 6 ஆயிரம் வாக்குகளை நீக்க முயற்சி செய்யப்பட்டது என்பது குறித்து ராகுல் காந்தி செய்தியாளர்களை சந்தித்து ஆதாரங்களை வெளியிட்டார்.
அப்போது, வாக்கு திருட்டு புகாரில் ஆதாரங்கள் உள்ளது. யதார்த்த நிலையை முற்றிலும் அழிக்கப்போகும் ஹைட்ரஜன் குண்டை வெளிப்படுத்த போகிறோம் என்று அவர் தெரிவித்தார்.
இந்நிலையில், ஏற்கனவே அறிவித்தபடி வாக்குத் திருட்டு பற்றிய ஹைட்ரஜன் குண்டை இன்று வெளியிடுவதாக ராகுல் காந்தி அறிவித்துள்ளார்.
இது தொடர்பாக 'THE H FILES' என்ற தலைப்பில் இன்று பகல் 12 மணிக்கு செய்தியாளர்களை சந்தித்து ராகுல் காந்தி உரையாற்றவுள்ளார்.