இந்தியா

உணவை வீணாக்கினால் அபராதம்- புனே ஓட்டலில் வினோத அறிவிப்பு

Published On 2025-08-20 12:40 IST   |   Update On 2025-08-20 12:40:00 IST
  • சமூக வலைதளங்களில் பல்வேறு கருத்துக்களை தெரிவித்து வருகின்றனர்.
  • உணவு வீணாவதைத் தடுப்பதற்கான ஒரு முன்னோக்கிய படி.

மகாராஷ்டிரா மாநிலம் புனேவில் உள்ள ஒரு ஓட்டலில் யாராவது உணவை வீணாக்கினால், அவர்கள் ரூ.20 அபராதம் செலுத்த வேண்டும் என்ற விதியை அறிமுகப்படுத்தி உள்ளது.

உணவு வீணாவதைத் தடுக்க இந்த புதுமையான முடிவை எடுத்துள்ளது. உணவை வீணாக்குவதற்கு அபராதம் விதித்து கையால் எழுதப்பட்ட உணவக அறிவிப்பு கார்டு புகைப்படம் தற்போது சமூக ஊடகங்களில் வைரலாகி வருகிறது.

இதுகுறித்து சமூக வலைதளங்களில் பல்வேறு கருத்துக்களை தெரிவித்து வருகின்றனர்.

திருமணங்கள் மற்றும் பிற நிகழ்வுகளிலும் இதே போன்ற விதி இருந்தால் உணவு வீணாவதை ஓரளவு கட்டுப்படுத்த முடியும். உணவு வீணாவதைத் தடுப்பதற்கான ஒரு முன்னோக்கிய படி.

உணவை வீணாக்கக்கூடாது என்பது சரிதான் ஆனால் ஒருவர் எப்படி தங்களுக்குப் பிடிக்காத உணவை உண்ணும்படி கட்டாயப்படுத்த முடியும் என்று கருத்து தெரிவித்துள்ளனர்.

இருப்பினும் வாடிக்கையாளர்கள் பொறுப்புடன் செயல்பட ஊக்குவிக்கும் நோக்கில் உணவகம் இந்த முடிவை எடுத்துள்ளதாகத் தெரிகிறது.

Tags:    

Similar News