இந்தியா
null

தனியார் மருத்துவமனைகள் நோயாளிகளை நடமாடும் ஏடிஎம் மெஷின்களாக பார்க்கிறது - உயர்நீதிமன்றம்

Published On 2025-07-26 15:21 IST   |   Update On 2025-07-26 15:22:00 IST
  • கர்ப்பிணிப் பெண் இறந்த சம்பவத்தில் மருத்துவமனை இயக்குநர் அசோக் குமார் ராய் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டது.
  • போதுமான உள்கட்டமைப்பு இல்லாமல் நோயாளிகளை அனுமதிப்பதாகவும் குறிப்பிட்டது.

தனியார் மருத்துவமனைகள் நோயாளிகளை ஏடிஎம்களாகப் பார்க்க முடியாது என்று அலகாபாத் உயர் நீதிமன்றம் தெரிவித்துள்ளது.

மயக்க மருந்து செலுத்துவதில் ஏற்பட்ட தாமதத்தால் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட கர்ப்பிணிப் பெண் இறந்த சம்பவத்தில் மருத்துவமனை இயக்குநர் அசோக் குமார் ராய் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டது.

தன் மீதான குற்றவியல் நடவடிக்கைகளை ரத்து செய்யக் கோரி மருத்துவர் உயர் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்திருந்தார்.

இந்த மனுவை விசாரித்த நீதிபதி பிரசாந்த் குமார் தலைமையிலான அமர்வு, தனியார் மருத்துவமனைகள் நோயாளிகளை ஏடிஎம் மிஷன்களாகவும், பணம் கறக்கும் கினிப் பன்றிகளாகவும் பார்க்கின்றன.

பல தனியார் மருத்துவமனைகள் மற்றும் நர்சிங் ஹோம்கள் போதுமான உள்கட்டமைப்பு இல்லாமல் நோயாளிகளை அனுமதிப்பதாகவும் குறிப்பிட்டது.

மருத்துவர் நோயாளியை அனுமதித்து, அறுவை சிகிச்சைக்கு குடும்ப உறுப்பினர்களிடமிருந்து அனுமதி பெற்றதாகவும், ஆனால் மயக்க மருந்து இல்லாததால் சரியான நேரத்தில் அறுவை சிகிச்சை செய்யவில்லை என்றும் கூறி, சட்ட நடவடிக்கைக்கு நீதிமன்றம் அனுமதி வழங்கி அசோக் குமார் ராயின் மனுவை நிராகரித்தது.

Tags:    

Similar News