இந்தியா
ரூ.5,477 கோடி திட்டப் பணிகளை தொடங்க குஜராத் செல்லும் பிரதமர் மோடி - நாளை 3 கி.மீ. ரோடு ஷோ!
- நரோடாவில் இருந்து நிகோல் வரை 3 கிலோ மீட்டர் தூரத்துக்கு அவர் பிரமாண்ட ரோடு ஷோ நடத்துகிறார்.
- மோடி ரூ.133.42 கோடியில் பிரதம மந்திரி வீடு கட்டும் திட்டத்தின் கீழ் 1,449 வீடுகள் மற்றும் 130 கடைகளை திறந்து வைக்கிறார்.
பிரதமர் நரேந்திர மோடி சமீபத்தில் பீகாரில் சுற்றுப் பயணம் மேற்கொண்டு பல்வேறு நலத்திட்டங்களை தொடங்கி வைத்தார்.
இந்த நிலையில் அவர் தனது சொந்த மாநிலமான குஜராத்துக்கு நாளை முதல் 2 நாள் பயணம் மேற்கொள்கிறார்.
பிரதமர் மோடி நாளை மாலை குஜராத் மாநிலம் அகமதாபாத் செல்கிறார்.
அங்குள்ள நரோடாவில் இருந்து நிகோல் வரை 3 கிலோ மீட்டர் தூரத்துக்கு அவர் பிரமாண்ட ரோடு ஷோ நடத்துகிறார்.
இந்த ரோடு ஷோவில் 1 லட்சம் பேர் பங்கேற்பார்கள் என்று மாநில சுகாதார மந்திரியும், பாஜக செய்தி தொடர்பாளருமான ருஷ்கிலேஷ் படேல் தெரிவித்துள்ளார்.
பின்னர் மோடி ரூ.133.42 கோடியில் பிரதம மந்திரி வீடு கட்டும் திட்டத்தின் கீழ் 1,449 வீடுகள் மற்றும் 130 கடைகளை திறந்து வைக்கிறார்.
மேலும் இந்த 2 நாள் பயணத்தில் அவர் ரூ.5,477 கோடி மதிப்பிலான திட்டங்களை தொடங்கி வைத்து அடிக்கல் நாட்டுகிறார்.