இந்தியா

ஜம்மு காஷ்மீர் முதல்வர் உமர் அப்துல்லாவை பாராட்டிய பிரதமர் மோடி.. ஏன்?

Published On 2025-08-01 09:53 IST   |   Update On 2025-08-01 09:53:00 IST
  • அப்துல்லாவின் வருகை குறித்து பிரதமர் மோடி மகிழ்ச்சி தெரிவித்துள்ளார்.
  • இந்தியாவின் பல்வேறு பகுதிகளுக்குச் செல்ல ஊக்குவிக்கும்.

ஜம்மு காஷ்மீர் முதல்வர் உமர் அப்துல்லா நேற்று குஜராத்தில் உள்ள வல்லபாய் படேலின் ஒற்றுமை சிலையை பார்வையிட்டார்.

இந்நிலையில் அப்துல்லாவின் வருகை குறித்து பிரதமர் மோடி மகிழ்ச்சி தெரிவித்துள்ளார்.

சபர்மதி ஆற்றங்கரையில் காலை ஓட்டப் பயிற்சி செய்து ஒற்றுமை சிலையை பார்வியிட்ட படங்களை முதல்வர் உமர் அப்துல்லா எக்ஸ் தலத்தில் பகிர்ந்தார்.

இதை பிரதமர் மோடி மறுபதிவு செய்து, 'காஷ்மீரிலிருந்து கெவாடியா வரை. சபர்மதி ஆற்றங்கரையில் ஒற்றுமை சிலையைப் பார்வையிட்ட உமர் அப்துல்லாவைப் பார்ப்பது மிகவும் மகிழ்ச்சியாக இருந்தது.

அவரது வருகை ஒற்றுமையின் ஒரு முக்கிய செய்தியை அளிக்கிறது. மேலும் நமது சக இந்தியர்களை இந்தியாவின் பல்வேறு பகுதிகளுக்குச் செல்ல ஊக்குவிக்கும்" என்று தெரிவித்துள்ளார். 

குஜராத் பாஜக அரசால் ரூ. 2,989 கோடி செலவில் கட்டப்பட்ட ஒற்றுமை சிலை கடந்த 2018 இல் திறந்து வைக்கப்பட்டது குறிப்பிடதக்கது. 

Tags:    

Similar News