நம்பிக்கையான உலக தலைவர்களில் பிரதமர் மோடிக்கு முதல் இடம்
- முதல் 8 இடங்களை பிடித்து இருக்கும் தலைவர்களின் பெயர்கள் வெளியிடப்பட்டுள்ளன.
- நம்பிக்கை பட்டியலில் 8-வது இடத்துக்கு அமெரிக்க அதிபர் டிரம்ப் தள்ளப்பட்டுள்ளார்.
உலக தலைவர்களில் நம்பிக்கையான தலைவர் யார்? என்று சமீபத்தில் ஆய்வு ஒன்று நடத்தப்பட்டது. அந்த ஆய்வில் ஒவ்வொரு நாட்டு தலைவரும் எப்படி நடந்து கொள்கிறார்? என்று ஆய்வு செய்யப்பட்டது.
மேலும் அந்த தலைவருக்கு அவரது சொந்த நாட்டில் எவ்வளவு மதிப்பு இருக்கிறது? என்றும் மக்களிடம் கருத்து கணிப்பு நடத்தப்பட்டது. அதோடு உலக நாடுகளில் அந்த தலைவருக்கு எந்த அளவுக்கு மரியாதை இருக்கிறது? என்றும் ஆய்வு எடுக்கப்பட்டது.
இவை மட்டுமின்றி ஒவ்வொரு நாட்டு தலைவரும் எந்த அளவுக்கு நம்பகத்தன்மையுடன் நடந்து கொள்கிறார்கள் என்றும் முந்தைய நிகழ்வுகளின் அடிப்படையில் மதிப்பீடு செய்யப்பட்டது. இந்த ஆய்வு மற்றும் மதிப்பீடு முடிவுகள் தற்போது வெளியிடப்பட்டுள்ளது.
இதில் முதல் 8 இடங்களை பிடித்து இருக்கும் தலைவர்களின் பெயர்கள் வெளியிடப்பட்டுள்ளன. அவர்களுக்கு கிடைத்த புள்ளிகள் விவரம் வெளியிடப்பட்டுள்ளது. இந்த நம்பிக்கை பட்டியலில் 8-வது இடத்துக்கு அமெரிக்க அதிபர் டிரம்ப் தள்ளப்பட்டுள்ளார்.
உலகின் நம்பிக்கையான தலைவர்களில் பிரதமர் மோடிக்கு முதல் இடம் கிடைத்து இருக்கிறது. அவர் 100 மதிப்பெண்களுக்கு 75 மதிப்பெண்களை பெற்று அசைக்க முடியாத முதல் இடத்தில் இருக்கிறார்.
2-வது இடத்தில் தென் கொரிய அதிபர் லி ஜோ மியுங்க் இருக்கிறார். அவருக்கு 59 மதிப்பெண்கள் கிடைத்துள்ளது. அர்ஜென்டினா அதிபர் ஜாவிஸ் 3-வது இடத்தை பிடித்துள்ளார்.
இந்த ஆய்வு அறிக்கையை பா.ஜ.க. மூத்த தலைவர்கள் மகிழ்ச்சியுடன் கொண்டாடி வருகிறார்கள். அவர்கள் தங்களது சமூக வலைதள பக்கங்களில் இந்த ஆய்வு அறிக்கையை பகிர்ந்துள்ளனர்.