இந்தியா
பாராளுமன்றத்தில் பேசும் போது அமித்ஷாவின் கைகள் பதட்டத்தில் நடுங்கின- ராகுல் காந்தி விமர்சனம்
- நான் கேட்ட கேள்விகளுக்கு அவர் நேரடியாக பதில் அளிக்கவில்லை.
- எனக்கு எந்த பதிலும் வரவில்லை என்றார்.
புதுடெல்லி:
பாராளுமன்றத்தில் நேற்று பேசும் போது அமித்ஷாவின் கைகள் நடுங்கியதாக மக்களவை எதிர்க்கட்சி தலைவர் ராகுல்காந்தி விமர்சித்துள்ளார். இது தொடர்பாக அவர் இன்று நிருபர்களிடம் கூறியதாவது:-
நேற்று அமித்ஷா மிகவும் பதட்டமாக இருந்தார். அவர் தவறான வார்த்தைகளைப் பயன்படுத்தினார். அவரது கைகள் நடுங்கின. அவர் கடுமையான மன அழுத்தத்தில் இருக்கிறார். இவை அனைத்தையும் நேற்று அனைவரும் பார்த்தனர்.
நான் கேட்ட கேள்விகளுக்கு அவர் நேரடியாக பதில் அளிக்கவில்லை. அவர் எந்த ஆதாரங்களையும் அளிக்கவில்லை. களத்துக்கு வாருங்கள், எனது அனைத்து செய்தியாளர்கள் சந்திப்பு பற்றியும் பாராளுமன்றத்தில் விவாதிக்கலாம் என்று நான் அவருக்கு நேரடியாக சவால் விடுத்தேன். ஆனால், எனக்கு எந்த பதிலும் வரவில்லை என்றார்.