இந்தியா

பிரதமர் மோடியின் வெளிநாட்டு பயண செலவு ரூ.295 கோடி- மத்திய அரசு தகவல்

Published On 2025-07-25 07:43 IST   |   Update On 2025-07-25 07:43:00 IST
  • பிரதமர் மோடி மேற்கொண்ட வெளிநாட்டு பயணங்கள் மற்றும் அதற்கான செலவினங்கள் குறித்து பாராளுமன்ற மாநிலங்களவையில் உறுப்பினர்கள் கேள்வி.
  • இந்த ஆண்டு 5 நாடுகளுக்கு பிரதமர் மேற்கொண்ட பயணங்களுக்கு ஆன செலவு ரூ.67 கோடி.

புதுடெல்லி:

பிரதமர் மோடியின் வெளிநாட்டு பயணங்கள் மற்றும் அதற்கான செலவினங்கள் குறித்து பாராளுமன்ற மாநிலங்களவையில் உறுப்பினர்கள் கேட்ட கேள்விகளுக்கு மத்திய வெளியுறவுத்துறை இணை மந்திரி கீர்த்தி வர்தன் சிங் எழுத்து மூலம் பதிலளித்தார்.

அதில் அவர், கடந்த 2021-ம் ஆண்டு முதல் 2024 வரை பிரதமர் மோடி மேற்கொண்ட வெளிநாட்டு பயணங்களுக்கான செலவு சுமார் ரூ.295 கோடி என தெரிவித்து இருந்தார்.

மேலும் இந்த ஆண்டு அமெரிக்கா மற்றும் பிரான்ஸ் உள்பட 5 நாடுகளுக்கு அவர் மேற்கொண்ட பயணங்களுக்கு ஆன செலவு ரூ.67 கோடி எனவும், மொரீஷியஸ், சைப்ரஸ், கனடா, குரேஷியா, கானா, டிரினிடாட்-டொபாகோ, அர்ஜென்டினா, பிரேசில், நமீபியா போன்ற நாடுகளுக்கு இந்த ஆண்டு அவர் மேற்கொண்ட பயணச்செலவு குறித்த விவரங்கள் இன்னும் கிடைக்கவில்லை என்றும் அதில் கூறப்பட்டு உள்ளது.

Tags:    

Similar News