இந்தியா

"சோனியா காந்தி குடியுரிமை பெற்றபின்னரே வாக்களித்தார்" - பிரியங்கா காந்தி!

Published On 2025-12-09 17:59 IST   |   Update On 2025-12-09 17:59:00 IST
  • குடியுரிமை பெறுவதற்கு 3 ஆண்டுகளுக்கு முன்னரே வாக்களர்
  • அவரது வயதை கருத்தில்கொண்டு அவரை விட வேண்டும்

இந்திய குடியுரிமை பெறுவதற்கு முன்பே வாக்காளர் பட்டியலில் சோனியா காந்தியின் பெயர் இடம்பெற்றதாக பாஜக குற்றம் சாட்டிவரும் நிலையில், அது திட்டமிட்ட பொய் என பிரியங்கா காந்தி தெரிவித்துள்ளார். இதுதொடர்பாக செய்தியாளர்களிடம் பேசிய பிரியங்கா,

"அவர்களிடம் ஏதேனும் ஆதாரம் உள்ளதா? இது முற்றிலும் பொய். அவர் இந்தியாவின் குடிமகளாக ஆன பிறகுதான் வாக்களித்தார். அவருக்கு 80 வயதாகும்போதும் அவரை ஏன் பின்தொடர்கிறார்கள் என தெரியவில்லை. தனது முழு வாழ்க்கையையும் தேசத்திற்கு சேவை செய்வதற்காக அர்ப்பணித்துள்ளார். அவரது வயதை கருத்தில்கொண்டு அவரை விட்டுவிட வேண்டும்" என தெரிவித்தார். 

1980-81 வாக்காளர் பட்டியலில் சோனியா காந்தியின் பெயர் சேர்க்கப்பட்டதாக, அதாவது அவர் குடியுரிமை பெறுவதற்கு முன்பே அவர் பெயர் வாக்களர் பட்டியலில் சேர்க்கப்பட்டதாகவும், இதுதொடர்பாக போலீஸ் விசாரணைக்கு உத்தரவிட வேண்டும் எனவும் விகாஸ் திரிபாதி என்பவர் டெல்லி மாஜிஸ்திரேட் நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்தார். ஆனால் இந்த மனுவை செப்டம்பர் தள்ளுபடி செய்து உத்தரவிட்டது நீதிமன்றம். 

இந்த உத்தரவை எதிர்த்து மீண்டும் மறுசீராய்வு மனு தொடரப்பட்டது. இந்த மறுசீராய்வு தொடர்பாக ரூஸ் அவென்யூவில் உள்ள செஷன்ஸ் நீதிமன்றம் இன்று சோனியா காந்திக்கு நோட்டீஸ் அனுப்பியது. தொடர்ந்து இந்த மனுமீதான விசாரணை அடுத்த மாதத்திற்கு ஒத்தி வைக்கப்பட்டுள்ளது. 

Tags:    

Similar News