இந்தியா

சாவர்க்கர் விழாவை சிறப்பிக்க அந்தமான் பயணிக்கும் உள்துறை அமைச்சர் அமித் ஷா

Published On 2025-12-10 05:32 IST   |   Update On 2025-12-10 05:32:00 IST
  • சாவர்க்கரின் சிலை ஒன்றை அவர் திறந்து வைக்க உள்ளார்.
  • சாவர்க்கர் 1911 ஆம் ஆண்டு தற்போது ஸ்ரீ விஜயா புரம் என்று அழைக்கப்படும் போர்ட் பிளேயரில் ஆங்கிலேயர்களால் சிறையில் அடைக்கப்பட்டார்.

மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா, சாவர்க்கரின் புகழ்பெற்ற கவிதையான 'சாகரா ப்ராண்' எழுதப்பட்டு 116வது ஆண்டு நிறைவை ஒட்டி, ஒரு நாள் பயணமாக அந்தமான் நிகோபார் தீவுகளுக்கு செல்ல உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.

தெற்கு அந்தமானில் உள்ள பியோத்னாபாத் என்ற இடத்தில் நடைபெறும் நிகழ்வில் சாவர்க்கரின் சிலை ஒன்றை அவர் திறந்து வைக்க உள்ளார். இந்த விழாவில் ஆர்எஸ்எஸ் தலைவர் மோகன் பாகவத் கலந்துகொள்வார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

மேலும் ஸ்ரீ விஜயா புரத்தில் உள்ள டாக்டர் பி.ஆர். அம்பேத்கர் தொழில்நுட்பக் கழகத்தில் (DBRAIT) நடைபெறும் பொதுக் கூட்டத்தில் உரையாற்றும் அமித் ஷா, அங்கு, சாவர்க்கருக்காக உருவாக்கப்பட்ட ஒரு பாடலை வெளியிடுவார் என்று கூறப்படுகிறது.

மேலும் ஸ்ரீ விஜயா புரத்தில் புதிதாக கட்டப்பட்டுள்ள தடயவியல் அறிவியல் ஆய்வகத்தையும் அவர் திறந்து வைப்பார்.

  இறுதிப் பயணத் திட்டம் விரைவில் கிடைக்கும் என்று மூத்த காவல் அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.

சாவர்க்கர் 1911 ஆம் ஆண்டு தற்போது ஸ்ரீ விஜயா புரம் என்று அழைக்கப்படும் போர்ட் பிளேயரில் ஆங்கிலேயர்களால் சிறையில் அடைக்கப்பட்டார்.  

Tags:    

Similar News