இந்தியா

வாக்காளர் சிறப்பு தீவிர திருத்தம் சட்ட விரோதமானது, அதை நிறுத்தவேண்டும்: மக்களவையில் ராகுல் காந்தி ஆவேசம்

Published On 2025-12-09 17:07 IST   |   Update On 2025-12-09 17:07:00 IST
  • பாராளுமன்றத்தின் மக்களவையில் எஸ்.ஐ.ஆர். மீதான விவாதம் நடைபெற்று வருகிறது.
  • இந்த விவாதத்தில் எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தி கலந்துகொண்டு பேசினார்.

புதுடெல்லி:

பாராளுமன்றத்தின் மக்களவையில் எஸ்.ஐ.ஆர். மீதான விவாதம் நடைபெற்று வருகிறது. இந்த விவாதத்தில் எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தி பேசியதாவது:

எந்த மாநிலத்துக்குச் சென்றாலும் வெவ்வேறு நடை, உடை, பாவனைகளை பார்க்க முடியும்.

காஞ்சிபுரம் பட்டு சேலையில் தங்க சரிகை இருக்கும். தங்க சரிகையில் நூல்கள் சேர்க்காவிட்டால் அதில் ஒன்றும் இல்லை.

150 கோடி மக்களின் வாக்குகளை சேர்த்து பின்னப்பட்ட துணி தான் நமது இந்தியா.

பல மதங்கள், பல சமுதாயங்கள், பல மொழிகளை கடந்து அனைவரும் ஒன்றாக இணைந்ததே நம் நாடு.

பாஜக தான் அதிகாரத்தின் உச்சத்தில் இருக்கவேண்டும், மற்றவர்கள் தனக்கு கீழ் என்று எண்ணுகிறது.

வாக்காளர் சிறப்பு தீவிர திருத்தம் சட்ட விரோதமானது. அதை நிறுத்த வேண்டும்.

தேர்தல் ஆணையரை நியமிக்கும் குழுவில் இருந்து இந்தியாவின் தலைமை நீதிபதிஏன் நீக்கப்பட்டார்?

நாட்டின் தலைமை நீதிபதி மீதே நம்பிக்கை இல்லையா?

பிரதமர் மோடியும், அமித்ஷாவும் குறிப்பிட்ட நபர்களை தேர்தல் ஆணையராக தீர்மானிப்பதில் ஆர்வம் காட்டுகின்றனர் என தெரிவித்தார்.

Tags:    

Similar News