இந்தியா

அமெரிக்க அதிபர் தேர்தலில் வெற்றி பெற்ற டிரம்பிற்கு பிரதமர் மோடி வாழ்த்து

Published On 2024-11-06 14:12 IST   |   Update On 2024-11-06 14:14:00 IST
  • மொத்தம் உள்ள 538 எலக்டோரல் வாக்குகளில் வெற்றிக்கு 270 க்கு மேல் பெறுபவர்கள் வெற்றி பெறுவார்கள்.
  • கமலா ஹாரிஸ் 226 இடங்களில் மட்டுமே வெற்றி பெற்றுள்ளார்

உலகமே எதிர்பார்த்த அமெரிக்க அதிபர் தேர்தல் வாக்குப்பதிவு இந்திய நேரப்படி நேற்று மாலை 5.30 மணிக்கு தொடங்கி இன்று அதிகாலை 5.30 மணிக்கு நிறைவடைந்தது. வாக்குப்பதிவு முடிந்த உடனேயே வாக்குகள் எண்ணும் பணி தொடங்கின. மொத்தம் உள்ள 538 எலக்டோரல் வாக்குகளில் 270-க்கு மேல் பெறுபவர்கள் வெற்றி பெறுவார்கள்.

வாக்கு எண்ணிக்கை தொடங்கியது முதலே முன்னிலையில் இருந்த குடியரசு கட்சி வேட்பாளர் டொனால்டு டிரம்ப் தற்போது 277 இடங்கள் வரை வெற்றி பெற்றுள்ளார். கமலா ஹாரிஸ் 226 இடங்களில் மட்டுமே வெற்றி பெற்றுள்ளார்

 

இந்நிலையில் 47-வது அமெரிக்க அதிபராக பொறுப்பேற்க உள்ள டிரம்பிற்கு பிரதமர் மோடி வாழ்த்து தெரிவித்துள்ளார். அவர் வெளியிட்டுள்ள எக்ஸ் தள பதிவில்,

வரலாற்று தேர்தல் வெற்றிக்கு என்னுடைய நண்பர் டொனால்டு டிரம்பிற்கு மனமார்ந்த வாழ்த்துகள்.

இந்தியா-அமெரிக்க விரிவான உலகளாவிய மற்றும் மூலோபாய கூட்டாண்மையை மேலும் வலுப்படுத்த நம்முடைய ஒத்துழைப்பைப் புதுப்பிக்க நான் எதிர்நோக்குகிறேன்.

ஒன்றாக, நமது மக்களின் முன்னேற்றத்திற்காகவும், உலகளாவிய அமைதி, ஸ்திரத்தன்மை மற்றும் செழிப்பு ஆகியவற்றை மேம்படுத்தவும் பாடுபடுவோம் என்று தெரிவித்துள்ளார்.

Tags:    

Similar News