இந்தியா

அகமதாபாத் விமான விபத்து குறித்து கேட்டறிந்தார் பிரதமர் மோடி

Published On 2025-06-12 15:16 IST   |   Update On 2025-06-12 15:16:00 IST
  • மத்திய விமானப் போக்குவரத்து துறை அமைச்சர் கிஞ்சரப்பு ராம் மோகன் நாயுடு விரைந்துள்ளார்.
  • மத்திய அரசு அனைத்து உதவிகளையும் செய்வதாக உறுதி அளித்துள்ளார்.

குஜராத் மாநிலம் அகமதாபாத்தின் சர்தார் வல்லபாய் படேல் சர்வதேச விமான நிலையத்தில் இருந்து லண்டன் (காட்வீக்) புறப்பட்ட ஏர் இந்தியா போயிங் 787 விமானம் விமானம் விழுந்து நொறுங்கி விபத்துக்குள்ளானது.

விமானம் புறப்பட்ட 10 நிமிடங்களில் மேகனி நகரில் விமானம் விழுந்து விபத்துக்குள்ளாகியுள்ளது. இதைத் தொடர்ந்து விமான நிலையம் அருகே கரும்புகை வெளியேறி வரும் நிலையில் விமானத்தில் இருந்த 242 பேரின் நிலை குறித்து அச்சம் ஏற்பட்டுள்ளது.

விபத்து குறித்து தகவல் அறிந்த நிலையில், 7 தீயணைப்பு வாகனங்கள் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று தீயை அணைக்கும் பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.

மேலும், விபத்தில் சிக்கியவர்களை மீட்பு படையினர் மீட்டு வருகின்றனர். பல உடல்கள் மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டதாக தகவல் வெளியாகியுள்ளது.

மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா, குஜராத் மாநிலம் முதல்வர் மற்றும் போலீஸ் துறை அமைச்சரிடம் பேசியுள்ளார். அப்போது மத்திய அரசு அனைத்து உதவிகளையும் செய்வதாக உறுதி அளித்துள்ளார்.

இந்நிலையில், சம்பவ இடத்தைப் பார்வையிட மத்திய விமானப் போக்குவரத்து துறை அமைச்சர் கிஞ்சரப்பு ராம் மோகன் நாயுடு விரைந்துள்ளார்.

இந்நிலையில், விமான போக்குவரத்து அமைச்சர் ராம்மோகன் நாயுடுவை தொடர்பு கொண்டு விமான விபத்து குறித்து பிரதமர் மோடி கேட்டறிந்துள்ளார்.

பயணிகளுக்கு தேவையான அனைத்து உதவிகளையும் உடனடியாக வழங்குவதை உறுதி செய்யவும் பிரதமர் மோடி உத்தரவிட்டுள்ளார்.

விபத்து நடந்த இடத்திற்கு, உற்துறை அமைச்சர், விமான போக்குவரத்து துறை அமைச்சர் ஆகியோரை அகமதாபாத் செல்ல பிரதமர் மோடி அறிவுறுத்தியுள்ளார்.

Tags:    

Similar News